பக்கம்:நினைவுச்சரம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 14%

‘ என் மக இருக்கா. அவளுக்கும் பதினெட்டு வயசு முடிஞ்சுபோச்சு. கல்யாணம் நடக்கிறதுக்கு இன்னும் வேளேயும் பொழுதும் வரலே என்று கூறிவிட்டு, உள்ளே பார்த்து

மயிலு என்ருள்.

மக பேரு மயிலம்மையா? என்று கேட்டுவைத்தார் பாவன்ன, தானும் ஏதாவது பேசவேண்டுமே என்பதற்காக. நான் இந்த நிலமையிலாவது இருக்கேன்னு சொன்னு அது பெரிய ஆச்சி புண்ணியத்தினலேயும் இந்த ஐயா ஆசீர் வாதத்தினுலும்தான். ஐயாவோட பேரைத்தான் என் மக ளுக்கு இட்டிருக்கேன்’ என்று நன்றி விசுவாசத்தோடு செண் பகம் பேசினுள்.

அவள் அப்படிச் சொன்னது மயிலேறும் பெருமாள் பிள்ளே யின் இதயத்தை தொட்டது. அவருள்ளத்தில் ஒருவித கனம் படிந்தது போலிருந்தது. அவர் எதுவும் சொல்லாமலே, பாயை பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்.

மயிலு ஒரு தட்டில் அஞ்சாறு முறுக்குகளே எடுத்துவந்து அம்மாவிடம் கொடுத்துவிட்டு அவ்விருவரையும் நோக்கிய, வாறு நின்ருள். பதினெட்டு வயதுக் குமரியை கவனித்த பெரிய பிள்ளைக்கு செண்பகத்தின் பதிமூன்று-பதிகுன்கு வயசு உருவமே நினைவில் படிந்தது. பெரியமனுஷி- ஆவ தற்கு முன்னரே-அவளுடைய பதிமூன்று பதின்ைகாவது வயதிலேயே-செண்பகம் நல்ல உடல் வளர்த்தி பெற்றிருந் தாள்.

முதலிலேயே மகளும் அம்மையும் சேர்ந்து நின்றிருந்த தால், சின்னவளின் தோற்றத்தைக் கொண்டே இவள் சென் பகம் மகளானல் பெரியவள் செண்பகமாகத்தான் இருக்க வேண்டும் என்று மிகச் சுலபமாக இனம் கண்டிருக்க முடியுமே என்று அவர் மனம் எண்ணியது.

முறுக்கு சாப்பிடுங்க. மயிலு, காப்பியை எடுத்தாம்மா, என்றவள், நில்லு நில்லு. இவங்கதான் சிவபுரம் பெரிய ஐயா. மதுரையிலேயே தங்கிட்டாகன்னு சொன்னேனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/149&oldid=589393" இலிருந்து மீள்விக்கப்பட்டது