பக்கம்:நினைவுச்சரம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 15

இனிமே எனக்கு யாரைப் பத்தியும் கவலையில்லே. இந்த ஊர்க்காரனுக என்ன வேணும்னலும் பேசட்டும், எனக்குக் கவலே கிடையாது. ஆமா.’ -

பெரிய பிள்ளே இதை அழுத்தம் திருத்தமாகக் கூறி முடித்து விட்டு, வெற்றிமிடுக்கோடு தலைநிமிர்ந்து பார்த்தார்.

‘இந்த ஊரும் ஒரு ஊரா அண்ணுச்சி! வாழுதவனே வாழவும் விடாது; தாழுதவனே தாழவும் விடாது என்கிற கதையிலே இருக்கு இந்த ஊரு. வேணும்கிற ஒருத்தனே தலைக்கு மேலே தூக்கி வச்சுக் கூத்தாடும். அவனே வேண்டா தவன் ஆயிட்டான்கிற போது, பொத்துனு அவனேக் கீழே போட்டு மிதிமிதின்னு மிதிச்சுத் துவையல் பண்ணிப்போடும். இந்த ஊருக்குன்னு ஆளுகளும் வந்து வாய்ச்சிருக்காங்க, ஆம்பிளேகளும் பொம்பிளேகளும் ஒரே மாதிரி. காரம், குணம், மணம் எல்லாத்திலேயும் ஒரே ரகம். அவங்க பெத்தெடுக்கிற புத்திரபாக்கியங்கள் மட்டும் மாறிப்போகுமா என்ன?அதுகளும் தலைமுறை தத்துவமா இருக்கிற எல்லாத்துக்குமே வாரிசு களாகத் தான் இருக்கு. பின்னே எப்படி ஊரு உருப்படும்? ஒரு நாளேக்கு ஒரு நாள் இந்த ஊரு உள்ளாறவே பேர்யிக்கிட்டு இருக்குதுன்னு சொன்ன, ஏன் போகாதுங்ங்ேன்?

ரொம்பவும் பேசிவிட்டதில் அலுப்புற்றவர்போல, சூரியன் பிள்ளே தலேயைத் தடவிக்கொண்டு, அப்பனே முருகா!’ என்று உரக்கக் கூவினர். மெளனத்தமர்ந்தார்.

'தம்பியாபுள்ளெ, இந்த ஊருமட்டுமில்லே, எல்லா ஊர் களுமே இப்படித்தான் இருக்கு. நான் பல ஊர்களேயும் பார்த்து, பலப்பல பேரோடவும் பழகியிருக்கிறதுேைலதான் ஓங்கிப் பேசுறேன். சிவபுரம் மட்டும் தனி வார்ப்பு இல்லே. பார்க்கப்போனு, இந்த நாட்டிலே உள்ள எல்லா ஊர்களும் சிவபுரம்களாகத்தான் இருக்கு, அதுேைலதான் ஐயா, உலகத்திலே எந்தெந்த நாடெல்லாமோ எப்படி எப்படியோ உருப்படியா வளர்ந்து உயர்வடைஞ்சுக்கிட்டே இருக்கிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/15&oldid=589256" இலிருந்து மீள்விக்கப்பட்டது