பக்கம்:நினைவுச்சரம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 15}

பாளையங்கோட்டை எல்லேயை கடந்து கோட்டுரை தாண்டி, சிறிதுகாலம் வாய்க்கால் ஒரமாக உள்ள ரோடில் நடந்து, பின் வயல்காட்டினுள் இறங்கினர்கள் இரண்டு பேரும்.

கோடை நாட்கள் ஆகையால் வாய்க்கால் வயல்கள் எல்லாம் வறண்டு வனப்பிழந்து காட்சிதந்தன.

வயல்களில் பயிர் வளர்ந்து நிற்கும் காலமாக இருந்தால், நீர்வளமும் பசுமையும் ஜிலுஜிலுக்கும். மரகதப் பசுங்கடல் என வியாபித்து வளர்ந்திருக்கும் நெல்பயிர் காற்றேடு அல் யாடிக் குதிப்பது உவகையூட்டும். இருபுறமும் நிற்கும் பயிர் களினுடே, அகலமான நடைவரம்பில் நடப்பதே இனிய அனுபவமாக அமையும். மேலே பளீரிடும் வானநீலமும், வெகுதூரம்வரை புலனுகும் பலரகச் சுற்றுவட்டாரக் காட்சி களும் அற்புதமாக விளங்கும்.

இப்போது வரப்புகளின் புல் காய்ந்து கருகி, வயல்களில் களிமண் பாளம்பாளமாய் வெடித்து, வெயிலின் சக்தியை எடுத்துக்காட்டின.

பார்த்துப் பன்னிரண்டு வருசத்துக்கு மேலாகிவிட்ட தனலே, செம்பகத்தம்மாளே சட்னு எனக்கு அடையாளம் தெரியலே. அதுவும் இல்லாம இந்த இடைக்காலத்திலேயே ஆளு ஒரே அடியா மெலிந்து, கிழடுதட்டி, ரொம்பவும் மாறிப் போயிருக்கா, இல்லாமைதான் காரணம் என்று பால்வண் ணம், வயல்களினூடே நடக்கும்போது, சொன்னர்.

'உம்...ஊம்’ என்று கூறிவந்த மன. பெனு. நான் இவளே இவளோட பதிலைாவது வயசிலே பார்த்தது. அதுக் குப்பிறகு பார்க்கவே இல்லை. சம்பகம்னு சொன்ன அவ ஆளுடைய அந்த இளமை உருவம்தான் நினைவிலே நிக்குது. நாற்பது வருசங்களுக்குப்பிறகு வந்து, அதுவும் எதிர்பாராத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/151&oldid=589396" இலிருந்து மீள்விக்கப்பட்டது