பக்கம்:நினைவுச்சரம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 1.59

போயி ஆற்றிலே குதிப்பாரு. அஞ்சாம நீந்திவந்து மண்ட பத்துத் தட்டட்டி மேலே ஏறி நின்று பாட்டுப் பாடுவாரு. அப்புறம் பல்டி அடிச்சு தண்ணிரிலே பாய்வாரு. வரால் மாதிரிப் போயி கிழக்கே போய் ஏறுவாரு. கரையிலே நிற்கிற வங்களுக்குத்தான் நெஞ்சு திக்திக்குனு அடிக்கும். அவரு கொஞ்சம்லுைம் பயப்படனுமே? ஊகுங். மனுசனுக்கு அசாத்திய துணிச்சல் :

சின்ன வயசிலே இப்படி ஒரு பயிற்சி இருந்ததனுலே தான் பக்கிள்பிள்ளே பின்னலே ஒரு பெரிய சாதனை புரிய முடிஞ் சுது. ஒரு வருசம் ஆற்றிலே பெரிய வெள்ளம், கொக்கிரகுளம் ஆற்றுக்குள்ளே இருக்கிற தைப்பூச மண்டபத்தை முக்கிப் போடுமோ என்று எண்ணவேண்டிய அளவுக்கு தண்ணி பெருகி ஓடுது. மேல்மட்டம், தட்டட்டிதான் பாக்கி. தட் டட்டி மேலே பத்துப் பதினேஞ்சு பேரு உசிருக்குப் பயந்து நடுங்கியபடி இருக்கிருங்க. என்ன, பண்டாரம் பரதேசி பிச்சைக்காரங்க ராத்திரி நேரத்திலே மண்டபத்தில் படுக் கிறது வழக்கம். திடீர்னு ஆற்றிலே தண்ணிர் வந்துவிட் டால், அவங்க எழுந்திருச்சு மேலே போக வசதியாக ஒரு ஏணியும் மண்டபத்தோடு சேர்த்து பதிக்கப்பட்டிருக்கும். அது வழியே உசரே போய் தங்கியிருப்பாங்க. தண்ணிர் குறைந்ததும் இறங்கி வந்திடுவாங்க. இப்பவும் அப்படித்தான் செஞ்சிருக்காங்க. அவங்க கஷ்டகாலம், மூணு நாளாத் தண்ணிர் வற்றவேயில்லே. அதுமட்டுமா? வெள்ளம் அதிகம் ஆகிக்கிட்டே வந்து, மண்டபத்தை இன்னிக்கு ராத்திரிக் குள்ளே முக்கியே போடும்கிறமாதிரி கூடிக்கிட்டே போச்சு. மண்டபத்து மேலே இருந்த அத்தனேபேரையும் வெள்ளத் துக்கு பலி கொடுப்பதா என்ற கேள்வி பிறந்தது. அது கூடாது, அவங்களை காப்பாத்தியே தீரனும்னு திருநெல்வேலி காங்கிரஸ் தொண்டர்கள் தீர்மானிச்சாங்க. அவர்களில் பக்கிள் பிள்ளேயும் ஒருவர்.

சுலோசன முதலியார் பாலத்துக்கு வந்து சேர்ந்தாங்க எல்லாரும். மீட்பு வேலைக்கான கயிறு, தொட்டில் மாதிரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/159&oldid=589407" இலிருந்து மீள்விக்கப்பட்டது