பக்கம்:நினைவுச்சரம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$6 நினைவுச்

போது, நம்ம நாடு தேய்ஞ்சு, டிம் அடிச்சுக்கிட்டே போகுது: என்று மயிலேறும் பெருமாள்பிள்ளே திடமாக அறிவித்தார்.

'முருகா உண்டு என்று முணுமுணுத்தார் சூரியன் பிள்ளை. ‘அண்ணுச்சி இன்னிக்கு நம்ம வீட்டிலே சாப்பிடுங்களேன்? என்ருச். -

'சாப்பாட்டுக்கென்ன! இன்னொரு நாள் சாப்பிட்டாப் போச்சு. இன்னக்கு பிறவிப் பெருமாள்பிள்ளே வீட்டிலே சாப்பிடச் சொல்லியிருக்காங்க...?

"யாரு, நம்ம நெல்லையாபிள்ளைவாள் வீட்டிலா?’ என்று இழுத்தார் மற்றவர். ---

ஆமா..?

-இந்த ஊரிலே இது ஒரு விசேஷம். அல்லது, சங்கடம். ஒவ்வொருவனுக்கும் அநேக பெயர்கள். அவன் பிறந்ததும் 'காப்பிட்டு வைத்த பெயர் நீளமாப் பெரிசா ஒண்ணு. அம்மா அந்தப் பெயரை சொல்ல மாட்டா. அது மாமனர் அல்லது மாமியார் அல்லது மச்சினர் அல்லது நாத்தனர் அல்லது இப்படி மரியாதைக்குரிய ஒரு குர்’ அல்லது 'ஆர்' எவரோடு பெயராகவாவது இருந்து விடும். அதனுலே அவள் ஒரு பெயரை வைப்பாள். இப்போ நான் தான் இருக்கேன் மயிலே றும் பெருமாள்னு எங்க அம்மா என்னே வேலாயுதம்னு கூப் பிடுவா. சின்னம்மை ஒருத்தி இருந்தா. அவள் சரவணுன்னு தான் அழைப்பா. சின்னப்பயலுகளோ மயிலுப்பய, மொட்டை, கிண்டன்னு சொல்லுவாங்க. வீட்டுக்கும் பேரு வச்சு அதைச் சொல்லிப் பேசுவாங்க. வேப்பமரத்தடி வீடு என்பாங்க எங்க வீட்டை. வேப்பமரத்து வீட்டு நல்லகண் னுப்பிள்ளை மகன் என்பாங்க. அப்பாவை ஐயாப்பிள்ளேன்னு ஊரிலே குறிப்பிடுவாங்க. அதுேைல ஐயாப்பிள்ளே வீட்டு மயிலேறு என்பாங்க. இப்படி ஒவ்வொரு வீட்டுக்கும், ஒவ்வொரு குடும்பத்துக்கும், குடும்பத்தின் பெரியவருக்கும் சின்னவங்களுக்கும், ஆம்பிளேகளுக்கும் பொம்பிளேகளுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/16&oldid=589257" இலிருந்து மீள்விக்கப்பட்டது