பக்கம்:நினைவுச்சரம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#60 நினைவுத்

யான அமைப்பு, அது அங்கேயும் இங்கேயும் போய்வருவ துக்கு ஏற்ற உருளே, இப்படி அநேக சாமான்கள். பாலத் திலே நின்னு சிரமம் எடுத்துக் குனிஞ்சால் வெள்ளத்தை தொட்டுப் போடலாம். அவ்வளவு தண்ணீர், பாலத்து மேலே வண்டிகிண்டி எதுவும் போகப்படாது என்று கட்டுப் பாடு பண்ணியிருந்தது. வீராவரம் கடைத்தெருவிலேகூடத் தண்ணீர் பரவிக்கிடந்தது. சரி. பாலத்துச் சுவற்றிலே பாருங்கயிறின் ஒரு முனேயைக் கட்டியாச்சு. உருளையை மாட்டியாச்சு கயிற்றின் மறு முனையை மண்டபத்திலே வசமான இடத்திலே பலமாக் கட்டியாகனும். கயிறை வீசி எறிந்தால், அது மண்டபத்தை தொட்டுவிட்டால், அங்கே இருந்தவங்களிலே சவகுவது ஒருவன் அதை பிடிச்சுக் கட்டி விடலாம். ஆனுல் கயிறு அங்கே போய் சேரனுமே! அநேக தடவை வீசி வீசிப் பார்த்தாங்க. அது மண்டபத்தை போய் தொடுறதாயில்லே. இப்படிப் பந்தாடினுல் கர்ரியம் நடக்காது ஐயா, இங்கேருந்தே ஒரு ஆளு கயிறை மண்டபத்துக்குக் கொண்டுபோயாகனும்; வேற வழியேயில்லே என்ருர் ஒருவர். நடக்கக்கூடிய காரியமா என்று மலேத்தார்கள் எல்லாரும். நடக்கத்தான் போகுது, பாருங்களேன் என்ருர் யோசனை சொன்னவர். பக்கிள்பிள்ளைதான் அப்படிச் சொன்னது. அவரு

  • . .ہ۔-م ४९

அப்போ திருநெல்வேலியிலேயே குடியிருந்தார். காங்கிரஸ் தொண்டர். பொதுநல சேவையில் நல்ல உற்சாகமாகப் பாடு பட்டார். சும்மா வாய்ச்சவடாலுக்காகப் பேசவில்லே, தைரிய மாய்ச் செயல்புரியக் கூடியவர் என்பதை அவர் அன்றைக்கு நிரூபித்துக்காட்டினர். கயிற்று முனையை இடுப்பிலே வரிந்து கட்டிக்கொண்டு மனுசன் வெள்ளத்திலே குதிச்சு நீச்சல் அடிக்க ஆரம்பிச்சிட்டார்.

வெள்ளம் பார்க்க வந்தவங்க, வெள்ளத்திலே அகப்பட்ட வங்களே காப்பாத்த வந்தவங்க அவங்களே வேடிக்கை பார்க்க வந்தவங்க என்று ஏகமாய் கூடிநின்ற ஆட்கள் எல்லாரும் தைப்பூச மண்டபத்தையும், அது மேலே இஞ்சி நடுங்கிக்கிட்டு நின்னவங்களேயும் அந்த வேளேக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/160&oldid=589408" இலிருந்து மீள்விக்கப்பட்டது