பக்கம்:நினைவுச்சரம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$66 நினைவுச்

பண்ணியும் பார்த்திருக்கலாம். ஒண்னும் பலிக்கலே. அதனுலே பழிவாங்க திட்டம்போட்டு, செம்பகம் பள்ளன் ஒருத்தனே வச்சுக்கிட்டிருக்கான்னு பேச்சை பரப்பினரு. சின்னப்பயல்களே தூண்டி சுவரிலே கரியாலே எழுதச் செய்தாரு. பள்ளப்பய கூடப்படுத்து சுகம் அனுபவிக்கிறவ கையாலே சமையல் செய்ற சாப்பாட்டை சாப்பிடலாமா ? அவ தோசைக்கு மாவு அரைக்கலாமா என்றெல்லாம் வம்புகள் பண்ணினுரு. அவரு வாய்க்கு பயந்து பிள்ளேமார் வீட்டுக் காரங்க செம்பகத்தை ஒதுக்கிட்டாங்க. அப்புறம் அவள் இந்த ஊரிலே இருந்து எப்படி வாழ்க்கை நடத்த முடியும் ? பட்ட ணக்கரையா பார்த்துப்போயி, இட்டிலி சுட்டும் பலகாரங்கள் தயாரித்து விற்றும் பிழைப்பு நடத்தலாமேன்னு இங்கிருந்து போயிட்டா. அது நடந்தும் பன்னிரண்டு வருசம் ஆச்சுதுன்னு செம்பகமே சொல்ருளே, பின்னே என்ன !’

மயிலேறும் பெருமாள்பிள்ளை நிமிர்ந்து உட்கார்ந்தார். சிசுத்த வெறுவாக்கெட்ட பய ஊரு இது. அப்பாவியா வாழ்ற ஆண்களேயும் பெண்களையும்பத்தி புரளிகட்டி, அவங்கபேருக்கு களங்கம் உண்டாக்குவதே இந்த ஊர்காரங்களுக்கு முக்கிய தொழிலாப்போச்சு. சில வருசங்களுக்கு ஒருமுறை யாரை யாவது இப்படி ஊரைவிட்டு ஒடும்படி பண்றதிலே இந்த ஊரானுகளுக்கு ரொம்ப குஷியும் திருப்தியும் கிடைக்கிற மாதிரி தோணுது என்று சீற்றக்குரலில் பேசினர்.

  • இப்பகூட இந்தத் தொழில் சிறப்பா இங்கே நடை பெற்று வருது அண்ணுச்சி என்ருர் பிற வியாபிள்ளே.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/166&oldid=589416" இலிருந்து மீள்விக்கப்பட்டது