பக்கம்:நினைவுச்சரம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆச்ரம் 167

| 6

நாற்பது வருஷங்கள்எல்லேயற்ற காலப்பெருவெளியில் அது ஒரு அற்பம். உலக வரலாற்றில், முக்கியமான பற்பல நிகழ்ச்சிகளுக்குக் களம் அமைத்துக் கொடுத்திருந்த போதிலும், அவ்வளவாகக் கவனிப்புக்கு உள்ளாகாத காலகட்டம். தனித்தனி நாடுகளின் கதையில் பெரும் மாறுதல்களே உண்டாக்கிய கணிசமான காலப்பகுதி.

நாற்பது வருஷங்கள்பெரும் பல ஊர்களின் வாலாற்றில் சாதாரணமான ஒரு அத்தியாயம் அது. சில ஊர்களின் கதையில் பசுமையான, சுவாரஸ்யமான-அல்லது, வறண்ட கொடிய-காலப்பகுதி. குடும்பங்களின் சரிதையில் வளமும் இன்பங்களும் நிறைந்த அத்தியாயமாகவோ, துன்ப துயரங்கள் சோதனைகள் மிகுந்த பருவமாகவோ, அல்லது இரண்டும் கலந்து கிடக்கும் பகுதி

யாகவோ அது அமைந்திருக்கும். -

தனி மனித வாழ்க்கையில் நாற்பது வருஷங்கள் என்பது பெரும் அளவானது ; மிக முக்கியமானது. அவரவர் வாழ் வின் மிகப் பெரும் பகுதியும்கூட.

நேற்றுப்போல் இன்று-இன்றுபோல் நாளே என்றுஎன்றும் ஒன்றுபோல் சாரமற்ற வாழ்க்கை நடத்துகிற சராசரி மனிதர்களிடம்கூட நாற்பது வருஷங்கள் என்ற காலகட்டம் எத்தனையோ பாதிப்புகளே, நிகழ்ச்சிகளே, உணர்வுக் கிளர்ச் சிகளே, லாப நஷ்டங்களே, வளர்ச்சி வீழ்ச்சிகளை, தடுக்கி விழுதல்கள் நிமிர்ந்து நிற்றல்களே கொண்டு சேர்த்திருக்கத் தான் வேண்டும்.

ஒவ்வொரு மனிதன் உள்ளுமே தினம் தினம் எத்தனை எத்தனையோ மாறுதல்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. ரூபநிலையிலும் அரூபமாகவும், ரத்தத்திலும் உணர்ச்சிகளிலும் எண்ணச் சுழிப்புகளிலும்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/167&oldid=589417" இலிருந்து மீள்விக்கப்பட்டது