பக்கம்:நினைவுச்சரம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#7ū - நினைவுச்

பிறகு, பால்வண்ணம் ஜெயப்பிரகாஷ் நாராயண் எழுதிய புத்தகங்களே வாங்கி வாசித்து, சோஷலிஸ்ட் கட்சிக் கொள் கைகளை பேசிக்கொண்டு திரிந்தார். பின்னர், கம்யூனிஸ்ட் கொள்கைகளில் ஆர்வம் காட்டினுர். அந்தக்கட்சி வெளியீடு களே வாங்கிப் படித்து மகிழ்ந்தார். இப்போது அவர் சைவ சமயத்தில் பற்றுக்கொண்டு, தேவாரம், திருவாசகம், ராம லிங்கர் அருட்பா என்று புத்தகங்களே வாங்கிக்கொண்டு, திருத் தலங்களே சுற்றித்திரிகிருச்.

இவர் மாதிரி எத்தனேயே பேர் .

சிவபுரத்தின் சராசரி மக்கள் சுதந்திரம் வந்தபோது, எல்லா ஊர் மக்களேயும் போலவே, கொடி ஏற்றி, இனிப்பு வழங்கி சந்தோஷம் கொண்டாடினர்கள். பிறகு சில வருஷங் கள் ஏதோ ஒருமாதிரி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அப்புறம் தானகவே அது நின்றுவிட்டது. -

காங்கிரஸ் கொடி நைந்து பழசாகிச் சாயம்போய் கிழிந்து தொங்கியது மாற்றப்படவும் இல்லை. அதன் பக்கத்தில் கம்யூ னிஸ்டுக் கட்சிக் கொடியும், கறுப்பு சிவப்புக்கொடியும் காலப் போக்கில் இடம் பெற்றன. அவை சாயம்போய், பழசாகிக் கிழிந்து தொங்கின. எப்பவாவது மாற்றவும்பட்டன.

சிவபுரம் மக்கள் அரசியல் விழிப்பு பெறவில்லை. அரசியல் கட்சிகள் அவர்களைப் பெரிதாக பாதித்துவிடவுமில்லை. தேர்தல் காலங்களில் பிரசாரகர்கள் வந்து கத்திவிட்டுப் போவதும், ஒட்டு தினத்தன்று கொஞ்சம் பரபரப்பு ஏற்படுவதும்தான் அரசியலால் ஏற்பட்ட தாக்கங்கள் ஆகும். மற்றபடி அவர்கள் உண்டு, அவர்கள் அலுவல்கள் உண்டு; அவர்களது சோம்பன் உண்டு ; அவர்களுடைய ஊர் வம்புகளும் அளப்புகளும் உண்டோ உண்டு.

சிவபுரம் மக்களில் பெரும்பாலோர் பத்திரிகை பற்றி எதுவுமே தெரியாதவர்கள். அவர்களில் தினப்பத்திரிகை வாங்குகிறவர்கள் மூன்று-நான்கு பேர்களே. அவற்றைப் பார்க்கிறவர்கள் பத்துப் பன்னிரண்டு பேர் இருக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/170&oldid=589421" இலிருந்து மீள்விக்கப்பட்டது