பக்கம்:நினைவுச்சரம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 நினைவுச்

சில இதழ்களே பட்டாசல் பெஞ்சிலோ, மேஜை மீதோ அலட் சியமாகப் போட்டு வைத்திருப்பார்கள். அதை எடுத்துப் பார்த்தால், அது இரண்டு வருஷத்துக்கு முந்திய கலைமகள் , போன வருஷம் ஒரு மாசத்தின் எந்த வாரத்திலோ வந்த ஆனந்த விகடன் , மூன்று மாதங்களுக்கு முற்பட்ட குமுதம் இதழாக இருக்கும். அந்த வீட்டுக்காரரும் என்ருே பத்திரிகை வாங்கியிருக்கிருர் அதுதான் முக்கியம் இங்கே ! -

மனிதர்கள் மாறுகிறர்கள்-மாற்றுகிருர்கள் ; மாறிவிடு கிருர்கள்-மாற்றப்படுகிறர்கள்.

காலவேகம், வாழ்க்கை நியதி, நாகரிகச் சுழல்கள், பொருளாதார ஏற்ற இறக்கங்கள், நாட்டு நிலைமைகள்-இப்படி எத்தனையோ புறப்பாதிப்புகளும், அவர் அவர்களுடைய விருப்பு வெறுப்புகளும், ஆசைகளும் கனவுகளும், உணர்ச்சி களும், எண்ணங்களும் போ ன் ற அகப்பாதிப்புகளும் இத்தகைய மாற்றங்களுக்கு பாவு விரித்து - நடை பாவாடை பரப்பி-கொடுக்கின்றன. -

காந்திஜியிடமும் காங்கிரஸ் கட்சியிடமும் மோகம் கொண்டு, ஆரம்ப காலத்தில் கதர் அணிந்தவர்களில் அநேகர் அப்புறம் அந்தப் பழக்கத்தை விட்டுவிட்டார்கள். மயிலேறுவும் மதுரைக்குப் போனதும் அதை மறந்துவிட் டான். நாட்டு வேட்டி’ என்ற கைத்தறி வேட்டிக்கு மாறி, பாம்பே மில் வேட்டிக்குப் போய், பின்னர் நைஸ் மல்: வேட்டிக்கு வந்து-அருமையா- மல் வேட்டி கட்டும் பெரிய மனிதராகும்படி காலம் செய்துவிட்டது.

சிவபுரத்து அந்நாளேய வாலிபர்கள், பம்பாய் நைஸ் ரக எட்டுமுழ மில் வேட்டிகட்டி, ஃப்யூஜி ஸில்க் என்கிற ஜப்பான் இறக்குமதிச் சரக்கில் தொளதொளச் சட்டை போட்டு, தோளில் அகலமான சிவப்புக்கரை உடைய தேங்காப்பூத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/172&oldid=589424" இலிருந்து மீள்விக்கப்பட்டது