பக்கம்:நினைவுச்சரம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 177

வசதி படைத்த சில பிள்ளைமார் வீடுகளில்கூட இக்கறி வகைகள் சமையற்கட்டில் பக்குவமாகத் தயாரிக்கப்படுவது உண்டு என்றும் சந்தேகிக்க இடம் ஏற்பட்டிருந்தது.

முன்பு இதர இனத்தவர் செருப்பு போட்டுக்கொண்டு :பிள்ளைமார் தெருக்களில் நடக்கக் கூசிஞர்கள். செருப்பணிந்து வந்தாலும், இந்தந் தெருக்களில் புகும்போது கால் செருப்பு களைக் கையில் எடுத்துக்கொண்டு நடப்பார்கள். தோளில் கிடக்கும் துண்டை இறக்கி, கை மடிப்பில் தொங்கவிட்டபடி போனர்கள். அப்படிச் செய்ய மனமில்லாதவர்கள் முதலி லேயே துண்டை தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டுதான் இந்தப்பக்கம் வருவார்கள்.

இந்த நாற்பது வருஷ காலத்தில் அதெல்லாம் மாறிப் போச்சு. இப்படி எவரும் நடந்துகொள்வதில்லை. காலப் போக்கில் நாட்டிலே ஏற்பட்ட சீர்திருத்தங்கள், படிப்பு, பண நிலேமை இவைகள் எல்லாம் இதற்குக் காரணம். அத்தோடு மற்ற இனத்தவங்க உசந்துவிட்டாங்க; நாம தாழ்ந்துக்கிட்டே போருேம் என்பதும் முக்கிய காரணம்தான்’ என்று ம.ை பென. எண்ணுவதும் பேசுவதும் சகஜமாயிற்று.

பொருளாதார நிலையில் சிவபுரத்தின் மத்தியதர வர்க்கத் துப் பிள்ளைமார் குடும்பங்கள் சறுக்குப்பாதையில் வேகமாய் கீழிறங்கிக் கொண்டிருந்தன. வீடுகள்தான் வெளிப்பார் வைக்கு பெரிது பெரிதாகக் காட்சி அளித்தனவே தவிர, வீட்டுக்குள்ளிருந்துவர்கள் காய்ந்து காற்ருடிக்கொண்டும் , பஞ்சப்பாட்டு பாடிக்கொண்டும் காலம் கழிக்கவேண்டிய நிலையில்தானிருந்தார்கள். வருஷா வருஷம் வீட்டுக்கு வெள்ளே அடிப்பதே பெரும்பாடாக இருந்தது பலருக்கும். கதவு போன சன்னல்கள், காறை உதிர்ந்த சுவர்கள், உப்புப் பொரிந்து செங்கல் விழுந்துவிட்ட பகுதிகள் போன்றவற்றை புதுப்பிக்கனும். சுண்ணும்பு பூசனும். சிமிண்டு வச்சுக் கட்டணும் என்று சொல்லிக்கொண்டும் நினைத்துக்கொண்டும் இருந்தார்களே தவிர, செயலில் நிறைவேற்ற வசதி இன்றித் தவித்தார்கள். அன்ருட வாழ்க்கையின் அத்தியாவசியத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/177&oldid=589431" இலிருந்து மீள்விக்கப்பட்டது