பக்கம்:நினைவுச்சரம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 நினைவுச்,

தேவைகளுக்கே ஒண்னும் ரெண்டும் அஞ்சும் பத்தும்’ கடனுகப் புரளாதா? இன்று யாரிடம் கேட்டுப் பார்க்கலாம்" என்பதை பெரும் பிரச்னையாகக்கொண்டு குழம்பித் தினரும் நிலேயிலிருந்த குடும்பத்தலைவர்கள் வீடுகளே பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவது எவ்வாறு ?

ஒருநாள் மன. பெனு. மற்றவர்களிடம் கேட்டார்: 'நம்ம ஊரிலே சமீபகாலத்திலே, இந்தப் பத்துப்பதினேஞ்சு வருஷத் திலேன்னு வச்சுக்கிடுங்களேன்! யாராவது புதுசா வீடுகட்டி

இருக்காங்களா ? புதுவீடு எத்தனே கட்டப்பட்டிருக்கும் ??

நகரங்களில் தினந்தோறும் வீடுகள் கட்டப்படுவதையும், மாதந்தோறும் புதுமனே புகுவிழா க்கள் அநேகம் நடை பெறுவதையும் கண்டு பழகிய பெரியபிள்ளைக்கு, சிவபுரத்தி லேயே இருந்தவர்கள் சொன்ன பதில் வியப்பை மட்டுமல்ல வேதனையும் தருவதாக அமைந்திருந்தது.

நல்லாக் கேட்டிங்க போங்க! என்று கனைத்தார் பால் வண்ணர். புது விடாவது கட்டுறதாவது! இருக்க வீடுகளே

ஒழுங்காக் காப்பாத்தினுல் போதாதா?’ என்ருர்.

i

சமீபத்தில் பத்துப் பதினேஞ்சு வருசம் என்ன! முப்பதுநாற்பது வருக; காலத்திலேகூட இந்த ஊரில் பிள்ளைமார் பகுதியில் புதுசா ஒரு விடும் கட்டப்படவில்லே. மறவர்கள் மிகுந்த வடக்கு ஊரில் புது வீடுகள் நிறையவே கட்டப்பட் டிருக்கு. கிழக்கே முன்பு அரிசனங்கள் மண்குச்சுகளில், ஒலப்பறை வீடுகளில் இருந்தார்கள். இப்போ அங்கே ஒரு ஒலேப்பறைக் குச்சுகூடக் கிடையாது. எல்லாம் ஒட்டுவீடுகள். மச்சு வீடுகள் கூட வந்திட்டுது. எலெக்ட்ரிக் லேட்டு, மேசை நாற்காலி, ரேடியே வகை:ராக்கள் உள்ள வீடுகளும்

நம்ம வட்டாரத்திலே பழைய வீட்டை இடிச்சு புதுப் பித்துக் கட்டியிருக்காங்க ரெண்டு மூணு வீட்டுக்காரங்க. ஒருத்தருக்கு கொள்ளிமுடிஞ்ச பணம் வந்தது. இன்ைெருத்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/178&oldid=589432" இலிருந்து மீள்விக்கப்பட்டது