பக்கம்:நினைவுச்சரம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*} ü 179

தருக்கு வீடு இடிஞ்சு விழவும், கடன் வாங்கியாவது புதுப்பிக் கலும் என்ற கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. மற்ருெருவர் பெண்டாட்டி கழுத்திலே கிடந்த தங்கம், வீட்டிலே இருந்த வெள்ளி இதுகளே வித்து, பூர்வகாலத்து வீடு இடிஞ்சு விழுந் திராதபடி எடுத்துக்கட்டினரு என்று சூரியன் பிள்ளே பட் டியல் பரப்பினர்.

இந்த ஊரிலே இடிந்துவிழுந்த வீடுகள் உண்டு. அடைத்துக்கிடக்கிற வீடுகள் உண்டு. விலேபேசி கைமாறி விட்ட வீடுகள் உண்டு. ஒத்திக்கும் அடமானத்துக்கும் விடப் பட்ட வீடுகள் உண்டு. இந்த வருஷமோ அடுத்த வரு ஷமோ-முன்னையோ பின்னேயோ-விழுந்துவிடுவோம் என்று கட்டியம் கூறிநிற்கும் வீடுகள் உண்டு. புதுசாக் கட்டப்பட்ட

வீடு ஒன்றுகூட இல்லே என்று ஏதோ மந்திரம் ஒதுவதுபோல்

நீட்டி முழக்கினர் பால்வண்ணம்பிள்ளை.

அவரே தொடர்ந்து பேசினர் : இதிலே வருத்தப்பட துக்கு ஒண்னுமில்லே அண்ணுச்சி. நான் பஸ்களிலே பல ருட்களிலும் போகையியே வரையிலே, வழியிலே பலதரப் பட்ட கிராமங்களேயும் கவனிக்கிறதுதான். அநேக கிராமங் களில் இப்படித்தானிருக்கு. இடிந்த வீடுகள், இடிந்துகொண் டிருக்கிற வீடுகள்...ஒன்றிரண்டு ஊர்களிலே ஒரு தெருவே அழிஞ்சு கிடந்ததைப் பார்த்தேன். தெருவில் உள்ள வீடுகள் எல்லாம் இடிஞ்சும் சிதைந்தும், கறையான் புடிச்சும்-அது ஒரு சோக நாடகம் எனேரியாக எனக்குப்பட்டது. அதை விடப் பெரிய கொடுமை-ஒருசமயம், குடியோடிப்போன குக்கிராமம் ஒன்று வெறுமையாய்-குடிசைகளும், கூரை சிதைந்த குச்சுகளும், மேல்பகுதியே போய்விட்ட கட்ட மண்னுகளும், சிதைந்து சரிந்துகொண்டிருந்த குட்டிச்சுவர் களுமா...மொத்தம் இருபது வீடுகள் இருக்கும்-எலும்புக் கூடு மாதிரி காட்சிதந்து நிற்பதை நான் கண்ணுலே காண நேர்ந் தது. எனக்கு அது ரொம்ப மனவேதனே தந்தது, அண் ச்ைசி. குடியோடிப்போய் இடிந்து சிதைகிற தனிவீடு ஒரு சோகக்கதை என்ருல், வெறுமையாகிப் பாழ்பட்டுப்போன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/179&oldid=589433" இலிருந்து மீள்விக்கப்பட்டது