பக்கம்:நினைவுச்சரம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 நினைவுச்

நேரம் சும்மா இருந்துவிட்டு, நான் வாறேன் அண்ணுச்சி, அப்புறமாப் பார்க்கலாம் என்று விடைபெற்றுக் கொண்டு வெளியேறிஞர்.

2

ஆஹங்? இந்த வீடு கட்டி எழுபது வருசம் ஆகுதா? ரொம்பவும் ஆச்சர்யப்படுகிறவர் போல் கேட்டார். பிறவிப் பெருமாள் பிள்ளை.

மயிலேறும் பெருமாள் பிள்ளேயை மத்தியானச் சாப்பாட் டுக்காகத் தன் வீட்டுக்கு அழைத்துப் போவதற்கு வந்திருந்

‘சரியாச் சொன்னு, எழுபத்தொண்ணுன்னு சொல்லனும். எனக்கு எழுபது வயசு முடிஞ்சிட்டுது. நான் பிறக்கிறதுக்கு, முந்தி, அம்மா என்ன உண்டாகியிருந்த வருசத்திலே, அப்ப இந்த வீட்டைக் கட்டின. ஒரு வைராக்கியத்திலே அவசரம் அவசரமாக் கட்டப்பட்ட வீடு. அம்மா இருந்த வரை, அடிக்கடி கதை கதையாச் சொல்லுவா,

அம்மா கல்யாணமாகி வந்த புதுசிலே சொந்த வீடு கிடையாது. மாமனர் பங்கு வச்சுக் கொடுத்த காலி மனே தான் இருந்திருக்கு.

தம்பியாபுள்ளே, அந்த நாளேயிலே பெரியவங்க நல்ல திட்டத்தோடு காரியங்களே கவனிச்சிருக்காங்க. சொந்தமாக் குடியிருக்க வீடு வேணும்னு, எப்பாடு பட்டாவது ஒரு வீட்டைக் கட்டிப்போட்டுருவாங்க. பையன் பிறந்தாச்சுதுன்ன, அவனுக்கு பிற்காலத்திலே வீடு கட்ட வேணும்கிற துக்காக, விலை செளகரியமா வாற மனேயை வாங்கிப் போட்டு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/18&oldid=589259" இலிருந்து மீள்விக்கப்பட்டது