பக்கம்:நினைவுச்சரம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 18:

அப்போ எல்லாம் நம்மவங்க வளமா வசதியா வாழ்க்கை நடத்தினங்க; வாழ்க்கையை நல்லா அனுபவிச்சாங்க என்று. தான் எண்ணவேண்டியிருக்கு எனப் பெரியபிள்ளே அடிக்கடி நினைத்துக்கொண்டார்.

ஒரு அக்கா விட்டுக்கோ அத்தை விட்டுக்கோ எப்போது போனலும், தம்பிகளுக்கும் மருமகன்களுக்கும் இந்த ஊரின் எந்த வீடுகளிலும் தின்பதற்கு ஏதாவது கொடுத்து மகிழ்ச்சி கொடுத்து மகிழ்ச்சியோடு உபசரிப்பது வழக்கமாக இருந்தது.

காலே நேரம் என்ருல், இரண்டு தோசைகளே தட்டில் வைத்து, தேங்காய்த்துண்டும் கருப்பட்டியும் எடுத்துவைத்து, அக்காக்காரி அன்பாக உபசரிப்பாள். அவள் கூடப்பிறந்த அக்கா ளாகத்தான் இருக்கவேண்டும் என்றில்லே. மத்தியா னமோ மாலேயிலோ எட்டிப்பார்த்தால், முறுக்கு, சீடை, பொருவிளங்காய் என்று அக்கா அல்லது அத்தை கொடுத்து மகிழ்வாள். கொடுப்பதில் ஒரு சந்தோஷம் உண்டு என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தவர்கள்.

எல்லா வீடுகளிலும் எப்பவும் வெண்கலப் பசனேயில் முறுக்கு, சீடை, கடலைப்பணியாரம், அவரைக்காய் பணி யாரம், பொருவிளங்காய் போன்ற திண்பண்டங்களில் ஒன் றிரண்டு வகைகள் ஸ்டாக் இருந்துகொண்டேயிருக்கும். ‘நாக்கு கொட்டுக் கொட்டு என்கிற சமயங்களில் 2, ஏதாவது தின்ன நல்லாயிருக்குமே என்று மனம் ஏங்குகிற வேளைகளில், எதையாவது மடிநிறையக் கட்டிக்கொண்டு சுவைத்து மகிழ் வார்கள். வீட்டுக்கு வருகிறவர்களுக்குக் கொடுக்கிற மனமும் அவர்களுக்கு இருந்தது.

சில வீடுகளில் கூழ்ப்பதினி தூக்குச்சட்டியில் இருக்கும். இளகிய கறுப்புக்கட்டிச் சாறுமாதிரி, ஆல்ை தனியானதொரு ருசியோடு, இருக்கிற அதை தோசையோடு சேர்த்துச் சாப் பிடுவதில் டேஸ்ட்’ அதிகம் கிராமவாசிகளுக்கு.

வசதி மிகுந்த வீடுகளில் மைசூர்பாகு, முந்திரிக்கொத்து, நெய்யுருண்டை போன்ற உயர்ந்த ரகப் பண்டங்கள் செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/181&oldid=589436" இலிருந்து மீள்விக்கப்பட்டது