பக்கம்:நினைவுச்சரம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#82 நினைவுச்

வைத்திருப்பார்கள். அவற்றை அன்டோடும் பிரியத்தோடும் மற்றவர்களுக்கு உதவும் தாராள மனமும் முன்பு எல்லோருக் கும் இருந்தது. -

அடிக்கடி திரட்டுப்பால் கிண்டிச் சாப்பிடுவார்கள். இதற்குப் பாலும் தேங்காயும் சர்க்கரையும் அதிகம் தேவைப் படும் ; செலவு அதிகமாகும். என்ருலும் அக்கம்பக்கத்தா ருக்குக் கொடுத்து இன்புற அவர்கள் தயங்கியதில்லை. - கோடைகாலத்தில் பதினியில் நுங்கு, மாம்பழம், எலு மிச்சம்பழம் எல்லாம் கலந்து சாப்பிடுவார்கள். குளுகுளு என்று ‘திவ்யமாக இருக்கும். நாகரிக நகரத்துப் பரிய ஒட்டலின் ஃபுளுட் ஸாலட் எந்த மூலக்கு!’ என்று எண்ணிக் கொள்வார் மனு, பெனு. to

குடும்பத்தினர் அனைவரும் வயிறுமுட்ட திருப்தியாய் சாப்பிட்டதும், உறவுக்காரப் பையன்களே கூப்பிட்டுக் கொடுத்து மகிழ்வித்து மகிழ்கிற மனம் பெரிய விட்டுக்காரர் களுக்கு அன்று இருந்தது.

வரவர வாழ்க்கை வசதிகள் குறைந்து, வளங்கள் சுருங்கி, காய்ச்சல்பாடு அதிகமாகிவிட்டதால், மனிதர் களின் மனவளமும் வறண்டு குறுகிப்போய்விட்டது. தங்க ளுக்கே பற்ருதபோது ஊராருக்குத் தானம் செய்ய மனம் எப்படி முந்தும் ? -

மனம் சுருங்கி குறுகிப் போகப்போகத் தான் வளங்களும் தேய்ந்து அருகிப்போயின. மனம்போல் வாழ்வு என்பது சும்மாவா பின்னே? எந்த நிலையிலும் தாராள மனம் என்பது மனுசனுக்குத் தேவை என்று மயிலேறும் பெருமாள் பிள்ளை எண்ணுவார்.

யோசிக்கும்போது மண்ணும் இயற்கையும்கூட தாராளத் தனம் குன்றி, வறண்டு வருவதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருத்தது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/182&oldid=589437" இலிருந்து மீள்விக்கப்பட்டது