பக்கம்:நினைவுச்சரம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 133

உதாரணத்துக்கு எள்ளும் நல்லெண்ணையும் போதுமே என்று பிள்ளையின் மனம் நினைவுபடுத்தும்.

அவர் முன்பு ஊரோடு இருந்த நாட்களில் அதிகாலேயி லிருந்தே, ஊரின் ஒரு கோடியில் உள்ள இடத்திலிருந்து செக்குகளின் ஒசை தனி இசையாக எழுந்து பரவிநிற்கும். செக்குகளில் எள்ளு போட்டு எண்ணே ஆட்டாத நாளே கிடை யாது என்றிருந்தது. எந்தக் கிராமத்துக்குப் போனுலும், செக்குமாடுகள் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருக்கிற காட்சியும், செக்கு எழுப்புகிற ஓசையும் நீங்காத அம்சங்களாக இருந் ததை உணரமுடிந்தது.

நடுத்தரவர்க்கத்தினர் வீடுகள் ஒவ்வொன்றிலும் ஜாடி களில், கலயங்களில் நல்லெண்ணெய் நிறைய இருந்து கொண்டே இருக்கும். பெரிய வீடுகளில், அவர்களது வயல் களில் எள் விதைத்து, அங்கு விளேந்த எள்ளேக்கொண்டு எண்ண ஆட்டி, குடங்களில் பெரியபெரிய கலயங்கள் அல்லது பானேகளில், ஜாடிகளில் ஸ்டாக்பண்ணி வைத்திருப்பார்கள். எண்ணே காம்பிவிடக்கூடாது? (கெட்டுப் போகக்கூடாது; என்று கருப்புக்கட்டி வட்டுகளே எண்ணேப் பாத்திரங்களுக்குள் போட்டிருப்பார்கள். -

- அந்த வளமான காலம் எங்கே போச்சு? ஏன் என் விளேச்சல் குறைந்து போச்சு? இளேத்தவன் எள்ளே விதை; கொழுத்தவன் கொள்ளே விதை” என்று அனுபவ ஞானம் பேசி, எள் பயனுள்ள லாபகரமான பயிர் என்று கண்டு பயிரிட்டு வாழ்ந்தவர்கள், ஏன் எள் விதைப்பதை நிறுத்தினுர் கள் ? அல்லது குறைத்துக் கொண்டார்கள் ? எள்ளுக்கு தட்டுப்பாடும், நல்லெண்ணைக்கு அநியாய விலையும் ஏற்பட வேண்டிய அவசியம்தான் என்ன?

இப்படி பெரியபிள்ளேயின் உள்ளத்தில் கேள்வி அலைகள் பொங்கிப் புரளும். பதில் யார் சொல்வது? எல்லாம் காலம் செய்கிற கோலம்தான் என்று அவர் மனமே கூறிக் கொள்ளும். -

இதே கதைதான் பல விஷயங்களிலும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/183&oldid=589439" இலிருந்து மீள்விக்கப்பட்டது