பக்கம்:நினைவுச்சரம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 நினைவுக்

செல்வமும் வாழ்க்கை வளங்களும் வண்டிச்சக்கரம் மாதிரி சுற்றிக்கொண்டே இருப்பன. சக்கரச் சுழற்சியில், ஒருசமயம் மேலே இருப்பது அடுத்தகணம் கீழே வந்து விடுவதுபோலவே, செல்வ வள நிலைமைகளும் வீழ்ச்சி எழுச் சிகளுக்கு உட்பட்டதுதான். நன்ருக வாழ்ந்து அனுபவித்த குடும்பங்கள் இப்போது தாழ்ந்து போய்விட்டன. தாழ்ந்த, நிலையிலிருந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் மேல்: நிலக்கு வந்து, இன்றைய வளங்களையும் வசதிகளையும் அனுப. வித்துப் பெருமைப்படுகிருர்கள்’ என்று மன. பென.வின் சிந்தனே கூறும்.

அனுபவிக்கட்டும். நல்லா அனுபவிக்கட்டும். ஆனு: இதிலே விரும்பத்தகாத விஷயம் என்னன்ன, வாழ்க்கையில் உண்மையான மாண்புகள் மதிக்கப்படுவதில்லை. உயர்ந்த பண்புகள் உரிய மதிப்புகளைப் பெறமுடிவதில்லை. போலியான பெருமைகளுக்கு மதிப்பு வந்துவிடுகிறது. பணம் ஒன்றுக்கே. முக்கியத்துவம் கொடுத்து பழக்கப்பட்டு விட்டதனுலே, பணத்தை-பணவருவாயை வைத்துத்தான் மனிதர்களை மதிப் பது என்ற நிலை சாதாரண ஜனங்களிடையிலும் பரவிவிட்டது. படித்த அறிவாளி, உயர் பண்புகளைப் போற்றி வளர்க்கும் நல் லவன், யோக்கியமானவன் போதிய பணவருவாய் பெற முடியாமல் போகிறபோது, இன்றைய சமூகங்களில் மட்டமான வனுகவே கருதப்படுகிருன். படிப்பு அதிகம் இல்லாவிட்டா லும், ஒரு மில்லிலோ, சிமின்ட் ஃபேக்டரியிலோ லேபரர் ஆகி, மாதந்தோறும் முந்நூறும் நானூறும் சம்பளம் என்றும், வரு ஷத்துக்கு ஒருதடவை கைநிறைய போனஸ் தொகையும் பெறமுடிகிற காரணத்தில்ை, படித்தும், பண்பாடுகள் வளர்த். தும் பண வருவாய் பெறமுடியாத நிலையிலிருக்கிறவர்களேவிட, தான் உயர்ந்தவன்-செயலானவன் என்ற எண்ணமும் நம்பிக்கையும், அதல்ை எழும் கர்வமும், பெருமையும், அகந்: தையும் சாதாரண நபர்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. பட்டம் பெற்ற, ஆற்றல் பெற்ற, அறிவாளிகளை-திறமைசாலிகளைவிட, அதிகம் அதிகமாகப் பணவருவாயும், கிளாமரும் புகழும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/184&oldid=589440" இலிருந்து மீள்விக்கப்பட்டது