பக்கம்:நினைவுச்சரம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் }85

அடைந்துவிடுகிற வாய்புகளே பெற்றிருப்பதல்ை சினிமா நடிகன்களும் நடிகைகளும் பெருமதிப்புக்கு உரியவர்கள் என்கிற ஒருநிலை இந்த நாட்டின் நகரங்களிலே வளர்ந்து விட்டதைப் போன்றதுதான், கிராமங்களில் மில் லேபரர் களும் ஃபாக்டரிக் கூலிகளும் பெற்று வளர்க்கிற இந்த நோக் கும் போக்கும் !’

பால்வண்ணம் பிள்ளை, அவருடைய பண்பாட்டின்படி, ஒரு சமயம் இப்படி லெக்சர் அடித்தார். -

'உம்-உம்' என்று தலையாட்டத்தான் முடிந்தது பெரிய பிள்ளையால்,

வேறு என்னத்தைச் சொல்ல ?

காலவேகத்தில் சமூகங்களில் ஏற்படுகிற எழுச்சிகளும் தாழ்ச்சிகளும் சம்பந்தப்பட்டவர்கள் மத்தியில் விதம் விதமான நோக்குகளையும் மனுேபாவங்களேயும் உண்டாக்கிவிடுவது

இயல்பேயாகும் ; தவிர்க்க முடியாதது என்று அவர் மனம் கூறிக்கொண்டது.

1 7

சிவபுரத்தில் ஒரு கல்யாணம் நடைபெற்றது.

அதை பார்த்த பெரியபிள்ளைக்கு அது ஒரு கல்யாண மாகவோ, அந்த வீடு கல்யாண வீடுபோலவோ தோன்ற வில்லே ! -

தெருவில் வீட்டின் முகப்பில்மட்டும் ஒரு ஆர்ச்’ போட் டிருந்தார்கள். இரண்டு பக்கங்களிலும் கால்’ நாட்டி, இடையே உயரத்தில் வெள்ளைத்துணியை சிறிதளவு இழுத் துக்கட்டி, அதுக்கு சுற்றிலும் பார்டர் மாதிரி குறுகலான

பூ108-கி-12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/185&oldid=589441" இலிருந்து மீள்விக்கப்பட்டது