பக்கம்:நினைவுச்சரம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் #87

பிள்ளைவாளின் மனம் அதன் தொழிலே ஒழுங்காகச் செய்துகொண்டிருந்தது.

  • கல்யாண வீடும் ஒரு கல்யாண வீடு மாதிரியாவா இருந்துது? முந்தினநாள் சாயங்காலம் நாலு மணியிலே இருந்து ரிக்கார்டுகளே ஒலிபெருக்கி மூலம் அலறவிட்டிருந் தாங்க, கல்யாண வீடு என்கிறதுக்கு அடையாளமா! மற்றப் படி ஒரு கூட்டமா, கலகலப்பா, அதா இதா ஒரு மண்னும் கிடையாது. அந்த வீட்டுக்காரங்களும் அவங்களேச் சேர்ந்த அஞ்சாறுபேரும் இருந்தாங்க. வெளியூர்காரங்க எல்லாம் மறு நாள் முகூர்த்த நேரத்துக்கு வந்தாங்க. தாலி கட்டி முடிஞ் சதும் வெத்திலேபாக்கு வாங்கிக்கிட்டு கம்பிநீட்டிட்டாங்க பல பேரு. சாப்பாடு முடிஞ்சதும் சப்ஜாடாவும் குளோஸ். உள்ளூர் காரங்க, பொம்பிளேக எல்லோரும் சாப்பிட்டபிறகு, கல்யாண வீட்டிலே பழையபடி வீட்டுக்காரங்க, பொண்ணு மாப்பிள்ளே, இவங்களே சேர்ந்தவங்க கொஞ்சப்பேரு-இவ்வளவேதான். ஒலிபெருக்கி சினிமாப்பாட்டுகளே கத்திகிட்டே இருந்துது. இதுக்குப் பேருதான கல்யாணம்?’ என்று மயிலேறும் பெரு மாள் குறைபட்டுக் கொண்டார். - -

நம்ம ஊர்லே மட்டுமா இப்படி நடக்கு? எல்லா ஊர்களி லும் எல்லாச் சாதிகளிலும் இப்போ இப்படித்தானே நடக்கு: என்று புால் வண்ணம்பிள்ளே கூறினர்.

' வரவர, கல்யாணங்களில் கல்யாணம் என்பதுக்குரிய சிறப்புகளே இல்லாமப் போயிட்டுதே ! முன்னுலே எல்லாம் நம்ம ஊரிலே கல்யாணம் வந்திட்டுதுன்னு சொன்ன, அது ஊரு பூராவுக்கும் பொதுவான ஒரு விசேஷமா, எல்லோருக் கும் சந்தோஷம் அளிக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சியா இருக் குமே!’ என்று பெரியபிள்ளே சொன்னர்.

- கல்யாண வீட்டு வேல்ேகள் செய்ய உற்ருர் உறவினர் எல்லாரும் ஒண்ணு சேருவாங்க கல்யாணத்துக்குப் பல நாட்களுக்கு முன்பிருந்தே கல்யாணப் பலகாரங்கள் தயாரிப் பதில் பொம்பிளேகள் மும்முரமா ஈடுபடுவாங்க. நாலுநாள் கல்யாணம், மூனுநாள் கல்யாணம், ரெண்டுநாள் கல்யா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/187&oldid=589444" இலிருந்து மீள்விக்கப்பட்டது