பக்கம்:நினைவுச்சரம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#88 நினைவுச்

ணம்னு போடுபோடுன்னு நடந்த காலங்களே மறந்திடுவோம்: ஒருநாள் கல்யாணம்னு நியதி ஏற்பட்டபிறகு கூட, அது பிரமாதமான ஏற்பாடுகளோடுதான் நடந்து துன்னே சொல்ல வாறேன். நம்ம ஊரிலே, கல்யாணத்துக்கு ரெண்டு நாட்க ளுக்கு முன்னுடியே வீடுவீடா ரெண்டுபடி அரிசி கொண்டு வந்து கொடுத்துட்டுப் போவாங்க, தோசைக்கு மாவு: அரைக்க. மறுநா உளுந்தம்பருப்பு கொடுத்திட்டு, அரிசி மாவை எடுத்துக்கிட்டுப் போவாங்க. அப்புறம் உளுந்த மாவை வாங்கிப்போக வருவாங்க. நான் அரைக்கமாட்டேன் -முடியாதுன்னு யாரும் சொல்றதில்லே. ஊர் ஒற்றுமையை, கூட்டுறவை, ஒத்துழைப்பை எடுத்துக்காட்டுகிற சின்னமா கத்தான் ஒவ்வொரு விசேஷமும் இருந்தது. விசேஷ வீட்டுக் காரன் எப்படியும் சமாளிக்கட்டுமேன்னு தெருக்காரங்க, ஊர்க் காரங்க விட்டுறமாட்டாங்க. என்ன வேலே நடக்கு, ஏதாவது செய்யனுமான்னு கூடமாட வந்து ஒத்தாசை செய்வாங்க. கல்யாணத்துக்கு முந்தினநாள், அந்தத் தெருவிலே ஒரு விட் டிலும் அடுப்பு புகையாது. எல்லாருக்கும் கல்யாண வீட்டிலே தான்சப்பாடு. பொம்பிளேகளும் ஆம்பிளேகளும் கல்யாண வீட்டு வேலேகளே இழுத்துப்போட்டு செஞ்சுக்கிட்டிருப்பாங்க. கல்யாணத்தன்னைக்கு மத்த வீடுகளில் சமையல் இராது. எல்லாருக்கும் கல்யாணச் சாப்பாடுதான். இப்போ சொந்தக் காரங்க, நெருங்கினவங்க, பக்கத்து வீட்டுக்காரங்க கூட முகூர்த்த வேளேக்கு த்லேயைகாட்டிப்போட்டு சாப்பாட்டுக்கு வராமலே இருந்திடுருங்க. மனுஷாளுக்கு மனுஷாள் ஒட்டு உறவு விட்டுப்போச்சு...

நம்மளவங்க கடன் வாங்கியோ, இருக்கிறதை வித்தோ, தாம்தும்னு கல்யாணத்தையும் கருமாதியையும் நடத்தி நடத்தித்தான் கெட்டுக் குட்டிச்சுவராய் போருங்க. ஊர் திரட்டி, துரா தொலைவிலே இருக்கிற உறவினரெல்லாம் வரனுமின்னு சொல்லி, ஆர்ப்பாட்டமா ஒருநாள் கூத்திலே ஏகப்பட்ட பணத்தை வேட்டுவிடுவது வேண்டாத வேலே , அண்ணுச்சி, மத்தவங்களுக்கும் வெட்டிச் செலவும் வீண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/188&oldid=589445" இலிருந்து மீள்விக்கப்பட்டது