பக்கம்:நினைவுச்சரம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 92 நினைவுக்

புருஷன் இருந்த காலத்திலேயே அவள் அடிக்கடி சிவபுரம் வந்து, அந்த ஊர் பற்றிய செய்திகளே சேகரிப்பாள்.

அவள் தனிநபர் என்ற போதிலும், ஒரு துப்பறியும் இலாகா மாதிரி இயங்கி வந்தாள் என்றே சொல்லவேண்டும். சிவபுரம் பத்தரை மாத்துகள் எந்தெந்த ஊரில் இருந் தாலும் சரி; அவர்களைப் பற்றிய சகல விவரங்களையும் எப்படி யாவது அறிந்து, சிவபுரத்தார்களின் பெர்சனல்ஃபைல்’களே பத்திரப்படுத்தியுள்ள அந்தரங்க அலமாரியாகத் தன் உள்ளத்தை மாற்றிக்கொண்டிருந்தாள் அவள், கோயில் என்றும் குளம் என்றும், சாமியார்கள் என்றும் கேஷத்ரம் என்றும் சதா ஸ்ர்க்கோடு (ஸர்க்யூட்) போய் வருவதில் உற்சாகம் காட்டிய அம்மையாருக்கு எங்கும் ஏகப்பட்ட * நிருபர்கள் கிடைத் திருந்தார்கள். அவர்கள் தங்கள் கைச் சரக்குகளேயும் சேர்த்து வண்டி வண்டியாக அவளுக்கு * நியூஸ் சப்ளே பண்ணிக் கொண்டிருந்தார்கள். அவளும் * ஆடிக்கு ஒரு தடவை, அமாவாசைக்கு ஒரு தடவை , தீபாவளிக்கொரு தடவை, திருவாதிரைக்கு ஒரு தடவை என்று சமயச்சந்தர்ப்பங்களே ஏற்படுத்தி, தனக்குக் கிடைத்த அக்கப்போர்களே மூட்டை கட்டிக்கொண்டு வந்து சிவபுரத் திலே அவிழ்த்து உதறுவாள்.

மற்றவர்களேப் பற்றிய நல்ல விஷயங்களே பேசிப் பரப்பு வதைவிட, பிறர் மீது கரிபூசும்-பிறரை அவமானப்படுத்தக் கூடிய-மட்ட ரகச் சங்கதிகளே வெகு சுவாரஸ்யமாக எங்கும் தெளித்து விடுவதிலேயே, ஆச்சிக்கும் அவளது கூட்டாளி களுக்கும் ஆர்வமும் அக்கறையும் அதிகம்.

செம்பராநல்லூரில் சிவபுரத்தா என்று சாட்டிப் பேசப்பட்ட ஆச்சி, சிவபுரத்தில் செம்பராநல்லூரா என்று குறிக்கப்பட்டதும் அவளுடைய வவ்வால் தனத்தை சுட்டிக் காட்டும் ஸிம்பாலிஸம் ஆக அமைந்திருந்தது என்று கொள்ளலாம்.

அழகம்மை ஆச்சிக்கு இப்போது அறுபதுக்கும் அதிக மாகவே வயசாகி விட்டது. இருந்தாலும், கவலேயற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/192&oldid=589451" இலிருந்து மீள்விக்கப்பட்டது