பக்கம்:நினைவுச்சரம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 195.

செம்பகம்ன்னு ஒரு மக இருந்தா. அப்போ அவளுக்கு பதி மூணு பதிலுை வயசிருக்கும். காதரை கூதரையா அலஞ்சுது சவம். செக்கொலக்கை மாதிரி உருண்டு திரண்டு வளர்ந் திருந்ததே தவிர, பெரியமனுஷி ஆகாமத்தான் இருந்துது. இந்தக் கரிமுடிவான் வீட்டுக்கு அடிக்கடி வரும். வேல்ேகளும் செய்யும். இந்தத் துப்புக்கெட்ட துமையைக்குடிக்கி அதை சிண்டி விளையாடி, சிரிக்கச் சிரிக்கப்பேசி, தின்கிறதுக்கு நெறையக் கொடுத்தும், துட்டுகளே குடுத்தும் நைஸ்பண்ணி, கட்டிப்புடிச்சு......என்னென்னமோ பண்ணி, பொண்டாட்டி இல்லாத குறையை தனிச்சுக்கிட்டு இருந்திருக்கான். ஒரு நா. பகலிலே, அந்தப் புள்ளையை கட்டிப்புடிச்சி விளையாடிக் கிட்டு இருக்கையிலே யாரோ பார்த்திருக்காங்க. இதை சும்மா விட்டுவைக்கப்படாது, அவனே விசாரிச்சு தெண்டம் வசூலிக்கணும்னும், இல்லே, சரியானபடி உதை குடுத்து அவன் திருத்தணுமின்னும் தெருக்காரங்க-ஊர்காரங்க மத்தியிலே கசமுசா கிளம்பியிருக்கு. அதை தெரிஞ்சுக்கிட் டதும் அவன் ராவோடு ராவா ஊரைவிட்டே ஓடிப்போயிட் டான். அவன் என்ன ஆன்ை, எங்கே போனுன்னு இங்கே ஊரே அலமோதிச்சு. அப்பாவி பொன்னம்மாளுக்குக் கூட விசயம் தெரியாதுன்னு பார்த்துக்கியேன்! பொறகு ஊன் பாசுன்னு லேசுலேசா குட்டு வெளிப்பட்டுது. பிறவியாபிள்ளே யோட அப்பா நாரம்புநாத பிள்ளைதான், அவனே மதுரைக்கு அனுப்பிவைச்சாரு அங்கே ஒரு வெள்ளிக்கடையிலே வேலை கிடைக்க வழி செஞ்சாருயின்னு தெரிஞ்சுது. அப்புறம் மயிலு நல்லபடியா இருந்து, மயிலேறும் பெருமாள் பிள்ளே ஆகி, கல்யாணமும் நடந்து, ஒரு பையனுக்கு தகப்பனும் ஆயிட் டாரு. தான் பண்ணினது அவருக்கு மனசிலே குத்தலே. இந்த ஊருமேலேதான் ஐயாப்பிள்ளேக்கு பொத்துக்கிட்டு வந்துட்டுது. இங்கே எட்டியே பார்க்கமாட்டேன்னிட்டு இருந்தாரு ஆன இந்த ஊரிலே உள்ள நெலத்திலே விளேஞ்சு வாறதை வித்த பணம்மட்டும் அவருக்குக் கசக்கலே. பூவுக் குப்பூவு நெல்லுவித்த பணத்தை வாங்கி முடிஞ்சுக்கிட்டுத் தான் இருந்தாரு என்று சொல்லிமுடித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/195&oldid=589454" இலிருந்து மீள்விக்கப்பட்டது