பக்கம்:நினைவுச்சரம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.96 நினைவுச்

இப்புடியும் உண்டுமா அநியாயம் !’ அநியாயம்னு லேசுப்பட்ட அநியாயம்னு சொல்லுதே! பெரியமனுஷி ஆகாத சின்னப்புள்ளேயை...ஆங்! என்று, என்றைக்கோ நடந்த தாகச் சொல்லப்படும் ஒன்றை எண்ணி இன்று அங்கலாய்த் தார்கள் ஆச்சியின் தோழிமார்கள்.

'இப்பம் எதுக்காக ஆச்சி இவரு இங்கே வந்து தங்கியிருக் காராம் ?? என்று ஒரு பேத்தி தூண்டினள்.

என்ன எழவுக்கோ, யாரு கண்டா?’ என்ற ஆச்சி, குரலே தாழ்த்திக்கொண்டு சொன்னுள் : செம்பகம் பாளே பங்கோட்டையிலேதான் இருக்கா. அவ ஒண்னும் லேசுப் பட்டவ இல்லே. இந்த ஊரிலேயே இருந்து பேரு எடுத்த சிறுக்கி அவ.

எவனே பள்ளனுக்கும் அவளுக்கும் தொடுப்புன்னு பேச்சு அடிபட, இந்த ஊரைவிட்டே போய் சேந்தாளே அந்தச் செம்பகமா?’ என்று ஒருத்தி விசாரிக்க,

ஆச்சி உற்சாகத்தோடு ஆமோ ஆமா. அவளேதான்? என்று அங்கீகரித்தாள் *

அப்படிச் சொல்லடி வழக்கை, இப்படிக்குடுடி ஒழக்கை யின்னுளாம்!’ என்று ஒருத்தி கைகொட்டிக் களித்தாள்.

செம்பகம் இப்ப முக்கால் கிழவி ஆகியிருப்பாளே ஆச்சி ??

அதுனுலே என்னட்டி? அவகிட்டே சின்னப்புள்ளேயா ஒரு மக இருக்கா. நம்ம மயிலுப்பிள்ளேக்குத்தான் சின்னப் புள்ளேன்னு சொன்ன ரொம்ப பிரியமாச்சே !’ என்ருள் ஆச்சி. இருந்தாலும், அவருக்கு இப்பம் எழுபது வயசு ஆச்சுங் கிருளே. இந்த வயசிலே...' என்று ஒரு சாதுக்குழந்தை? (இவளுக்கும் முப்பது வயசு ஆகுது) சந்தேகப்பட்டது.

உனக்கு என்னட்டி தெரியும் உலகத்தைப்பத்தி ! இதுக் கெல்லாம் வயசு வந்து குறுக்கே நிக்காது. எழுபது எம்பது வய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/196&oldid=589455" இலிருந்து மீள்விக்கப்பட்டது