பக்கம்:நினைவுச்சரம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 197

சிலே, சின்னப் பொண்ணுத் தேடி கல்யாணம் கட்டிக்கிடுத வங்களே ப்பத்தி அப்பப்போ பேப்பர்லே போட்டுவிடத்தான் செய்யுதான். இது இந்த காலத்திலே மட்டுமில்லே; எல்லாக் காலத்திலும் இருந்த நடைமுறைதான். யயாதின்னு ஒரு ராசா இருந்தான். தொண்டு கிழமாப்போன பிறகுகூட இந்த ஆசை அவனுக்கு விடலே. அப்படியும் தேவயானி, சன் மிஷ்டைன்னு ரெண்டு பொண்டாட்டிக கூட வாழ்ந்து பிள்ளே குட்டி பெத்தவன்தான். அவன் மேலும் மேலும் அனுபவிக் கணும்னு ஆசைப்பட்டு, அவனுடைய மகன் ஒருத்தன் புரூ. யின்னு, அவன் தன் இளமையை இவனுக்குத்தர, இந்தக் கிழட்டுத்துரமை ரொம்பகாலம் ஆசைப்பட்டதை எல்லாம் அனுபவிச்சுக்கிட்டு இருந்தான்னு புராணம் சொல்லுது. நடந்ததை-நடக்கதை-தான் முன்னுள்ளோரு இப்படி கதையா எழுதிவச்சிருக்காங்க. இந்த ஆம்பிளேகளே, எப் படிப்பட்டவங்களா இருந்தாலும், நம்பவேபடாது. அவங்க கிட்டே உடல்சுத்தம், மன சுத்தம் கெடையவே கெடையாது: என்று அழுத்தம் திருத்தமாக அபிப்பிராயம் தெரிவித்தாள் செம்பராநல்லூர் ஆச்சி.

என்னமோ அம்மா, இதெல்லாம் யாருக்குத் தெரியுது!! என்றும், ஊரிலே உலகத்திலே என்னென்னவெல்லாமோ நடக்கு!’ என்றும், ஊரு ரொம்பக் கெட்டுப்போச்சு 12 என்றும், காலம் கெட்டுப்போச்சு!’ என்றும், ஆள் ஆளுக் குத் தோன்றியதை சொல்லிவைத்தார்கள் அம்மாக்கமாருக,

இப்படி வம்பு பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே

என்ற கருத்துக் கொண்டுள்ள ஆச்சிக்கு அன்றையப்பொழுது விணுகவில்லை என்று திருப்தி !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/197&oldid=589456" இலிருந்து மீள்விக்கப்பட்டது