பக்கம்:நினைவுச்சரம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரம் 199

உடம்பில் காணப்படுவதுபோல் முண்டுகளும் முடிச்சுகளும் பரவியிருக்கும். அதனுல்தான் அதற்கு குட்டநோக்காட்டு மாம்பழம் கொற நோக்காட்டு குறை நோக்காடு மாம் பழம்' என்ற பெயர்.

பெருங்குளம் சிவன்கோயில் பிரகாரத்தில் நின்ற இரண்டு மரங்களில் மட்டும்தான் அப்படிப்பட்ட காய்கள் காய்த்துப் பழமாயின. ஒவ்வொரு மரத்தின் ஒவ்வொரு கிளேயிலும் நிறையவே காய்த்துத் தொங்கின. ஐம்பது வருஷங்களுக்கு முன்பு, அதற்கு அவ்வூர்க்காரர்கள் ஒரு கதையும் சொன் ஞர்கள்.

-ஆதியில் அந்த மரத்துக் காய்களும் பழங்களும் குறை இல்லாமல், வழவழ மினுமினுப்போடுதான் இருந்தன. ஒரு சமயம் ஒரு பரதேசி அந்த ஊருக்கு வந்தான். சிவன் கோயில் பிரகாரத்தில் குலைகுலையாய் மாங்காய்கள், செம்பு தண்டிக்கு, காய்த்துத் தொங்குவதைப் பார்த்தான். ஏயம்மா, எவ்வளவு பெரிசு, எத்தாத் தண்டி, எவ்வளவு காய்கள் என்று சொன்னுன். மறுநாளே காய்கள் மீது, குஷ்டரோ கிக்கு உள்ளதுபோல், முண்டு முண்டாக துருத்தல்கள் ஏற். பட்டுவிட்டன. அதிலிருந்து தொடர்ந்து இப்படியே தானிருக்கு. அந்தப் பரதேசியின் கண்பட்டுத்தான் அம்மரங் களின் காய்களுக்கு இந்தக்குறை ஏற்பட்டுவிட்டது. அன்று முதல் அதுக்கு கொறநோக்காட்டுப்பழம், குட்டநோக்காட் டுப்பழம் என்ற பேரும் ஏற்பட்டுவிட்டது. ஆலுைம் பழம் பருமனிலோ, நிறத்திலோ, ருசியிலே மாற்றம் அடைய வில்லே. கடவுள் செயல்தான் ! -

பல வருஷங்கள் அம்மரங்கள் காய்த்து நின்றன. ரொம்ப வருஷங்களுக்குப் பிறகு அவை காய்ப்பு ஒழிந்து வெறும் மரமாகி நின்றன என்றும், பிறகு பட்டுப்போயின என்றும் அவர் கேள்விப்பட்டிருந்தார்.

அங்கே அம்மரங்கள் காய்த்துப் பழங்கள் தந்துகொண் டிருந்ததை அவர் பார்த்திருக்கிருர், முண்டுகள் படர்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/199&oldid=589458" இலிருந்து மீள்விக்கப்பட்டது