பக்கம்:நினைவுச்சரம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம்

203

சிவபுரத்தின் தெற்குப் பகுதித் தெருக்களில் பகல் நேரத் திலேயே ஆள் நடமாட்டம் அதிகம் இராது. ஊரிலே ஆட் களே இல்லையோ என்று சந்தேகிக்கவைக்கும் அளவுக்கு வெறிச்சோடிக்கிடக்கும். இருட்டிய உடன் அழுத்தமான அமைதி கவிந்துவிடும். ஏழரை எட்டு மணிக்கெல்லாம் ஒரு சுடுகுஞ்சுகூட தெருவில் நடமாடாது. ஒன்பது மணிக்கு ஒரே உறக்க மயம்தான்.

முன்பு ம.ை பென. ஊரோடு இருந்த காலத்தில் விளக்கு வெளிச்சம் இராது. சத்தங்கள் அங்குமிங்குமாக நாய் குரைப் பதும், எங்காவது பிள்ளை அழுவதும்தான் இரவுகளில். பகலில் நாயின் குரைப்பு இராது. மத்தியான வேளைகளில், சமையல் நேரத்தில், பல வீடுகளுக்கப்பால் அம்மி தட்டுவது கூட (அம்மியில் தேங்காய் அல்லது மசால் சாமானே வைத்து, அரைப்பதற்காகத் தட்டுவது) சடார்-மடார் என்று செவிட்டில் அறைகிறமாதிரி காதில் விழும். அடுத்த தெருவில் எங்கோ ஒரு வீட்டில் தட்டுவதுகூட, பக்கத்து வீட்டில் தட்டப்படுவது போல் கேட்கும். பிற்பகலில் அமைதி தொங்கும். அதை கலேக்க முயல்வதுபோல் ஈயின் ரீங்கரிப்பும், கருவண்டின் இடையருத ஒசையும் பெரிதாக ஒலிக்கும்.

இப்போதும் அம்மி தட்டுகிற ஓசை அடிக்கடி காதை பிய்க்கத்தான் செய்கிறது. ஒரு மணிக்கு அல்லது முக்கால் மணிக்கு ஒருதடவை பஸ் வந்து போகும் இரைச்சலும், ஆரன் ஒசையும் காற்றில் மிதந்து வருகின்றன. இதற்கெல் லாம் மேலாக இரண்டு மைல்களுக்கு அப்பால் உள்ள சிமின்ட் ஃபாக்டரியில் இடைவிடாது ஒலித்துக் கொண்டிருக்கிற இயந்திர ஓசை, ஏதோ ஒரு கதியில் இசைக்கப்படும் ஊமை சங்கீதம் மாதிரி, இரவு பகல் எந்நேரமும் கேட்கிறது. இரவு களில் கனமாக ஒலிக்கும்.

இரண்டு மணிக்கு விழித்துவிட்ட மன. பெஞ.வின் காது

களே அந்த இயந்திர ஒலி நிறைத்தது. வேப்ப மரத்திலிருந்து கத்திய இரண்டு ஆந்தைகளின் அலறல் அறுத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/203&oldid=589462" இலிருந்து மீள்விக்கப்பட்டது