பக்கம்:நினைவுச்சரம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 நினைவுக்

- இப்போ பரவால்லே. முன்பு நடுராத்திரிலே, கூகூ...கூவோய்...கூவோகூ என்று பயங்கரமான கூச்சல் திடீரென்று எழும். யாரோ பயந்து அடித்தொண்டையி, இருந்து அலறுகிற மாதிரி. கழுத்தைப் புடிச்சு நெரிக்கிறது ேைல, நெரிக்கப்படுகிறவன் கத்த முடியாமக் கத்துகிற மாதிரி. பயப்படவைக்கும் கோரமான கதறல். சின்னப் பிள்ளைகள் பதறி அழும். கூகை சத்தம்தான். ஆந்தை மாதிரி ஒரு ராப்பறவை. ஆந்தையை விடக் கொஞ்சம் பெரிசாக இருக்கும். ஆன என்னமாதிரித் தொண்டை ! எவ்வளவு பயங்கரமான கத்தல் : வீட்டுக் கூரையிலே வந்து உட்கார்ந்து கத்தும். ஒட்டு மேலே, மரத்து மேலே, தட்டட்டி மேலே, எங்கெங்கோ உட்கார்ந்து அலறும். இங்கே கத்துறது அந்த வீட்டிலே எழவு விழும் என்பாங்க. இப்ப அது இல்லா மலே போச்சு. சவம் ஒழிஞ்சுது : -

அதில் பெரியபிள்ளைக்கு ரொம்ப சந்தோஷம். ஊருக்கு வந்த சில தினங்களிலேயே, கூகைச்சத்தம் கேட்பதில்லை. என் உணர்ந்து, அதுபற்றி மற்றவர்களிடம் விசாரித்தார். கூகைகள் பெருத்துப்போனதால், அவற்றை சுட்டு ஒழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன; இரண்டு மூன்றை சுட்டுக் கொன்றவுடன் எஞ்சியிருந்தவை பயந்துபோய், ஊருக்குள் வராமல் ஆற்றங்கரை மாந்தோப்பிலும் பனங்காட்டிலும் பதுங்கித் திரிந்தன. இரவின் கண்ட கண்ட நேரங்களிலும், விடியப்போகிற சமயத்திலும் தோப்புகளிலிருந்து கூகைகள் கூவிக்கொண்டிருந்தது இங்கேவரை கேட்டது. பயங்கரமான சத்தம். அபசகுனம் மாதிரியும் இருந்தது. ஊரிலிருந்து ஏற்பாடு பண்ணி, வேட்டையாட்களே அனுப்பி ஒன்றுவிடாமல் அவற்றை சுட்டுத் தீர்த்தாச்சு. அப்புறம் கூகை தலைகாட்ட வில்லை. ஆந்தைகள்தான் பெருத்துப்போச்சு என்று ஊர் காரர்கள் தெரிவித்தார்கள். - -

தொஆலயவேண்டியதுதான்!” என்று மகிழ்வுற்றர் பிள்ளை. கிருஷ்ணபட்சத்து நிலவு அருமையாக மிளிர்ந்து, எங்கும் அமுத ஒளி பூசிக்கொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/204&oldid=589463" இலிருந்து மீள்விக்கப்பட்டது