பக்கம்:நினைவுச்சரம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 209

சரி. நான் இட்டிலி அவிச்சு வைக்கிறேன். அல்லது தோசை சுட்டு...?

அதொண்ணும் கிடையாது. பழையச் சோறுதான் நீ எதுவும் செய்யவேண்டாம். பேசாமல் கதவை சாத்தி தாப்பாள் போட்டிட்டு பட்டாசலிலே படுத்திரு. துர்க்கம் வந்தால் தூங்கு. அடுப்படியிலே, ஃபிளாஸ்கிலே காப்பி வச்சிருக்கேன். வேணுமின்ன எடுத்துக்குடி. இப்ப மணி அஞ்சரை. நான் ஆறரைக்கெல்லாம் வந்திருவேன் என்று சொல்லி, முன்வாசல் கதவை இழுத்துச் சும்மா சாத்திவிட்டு, தெருவில் இறங்கி வேகமாக நடந்தார் அவர்.

§

அப்படி என்ன முக்கிய விஷயம் இருக்கும்?’ என்று அவர் மனம் அகிலமோதியது. அந்த சஞ்சலத்தினுடுைம் உண்மையான ஆனந்தம் அரும்பி மலர்ந்தது.

சில சமயங்களில் மனம் எண்ணுகிறதும் ஆசைப்படு வதும் உடனடியாக நிறைவேறி விடுது; ரொம்ப அதிசயம் தான். நேற்று சாயந்திரம்தான், திரட்டுப்பால் தின்னு நாளாச்சு, திரட்டுப்பால் செய்து பார்க்கனும்னு நினைச்சேன். தின்ன நினைக்கிறபோது எடுத்துத் தின்கிறதுக்கு வசதியா தினபண்டம் ஏதாவது ஸ்டாக் பண்ணனும்னு ஆசைப்பட் டேன். திரட்டுப்பாலும் இப்ப வந்திருக்கு ; ஸ்டாக் பண்ண முறுக்கும் கிடைச்சிருக்கு. ஹ ஹ ஹ...

மகிழ்வுற்றது அவர் உள்ளம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/209&oldid=589468" இலிருந்து மீள்விக்கப்பட்டது