பக்கம்:நினைவுச்சரம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 நினைவுச்

2 :

ஆற்றுக்குப் போகும்போதும், ஆற்றில் குளித்தபோதும், திரும்பி நடந்தபோதும், பெரியபிள்ளே செண்பகத்தைப் பற்றித்தான் எண்ணிக் கொண்டிருந்தார்.

- செண்பகம் எவ்வளவு அன்பு வச்சிருக்கா! அவளுக்கு என்னவோ காரியம் ஆகவேண்டும், அதுக்காகத்தான் தேடி வந்திருக்கான்னுலும், ஞாபகம் வச்சு, எவ்வளவு பிரியத் தோடு திரட்டுப்பாலும் முறுக்கும் தன் கையாலேயே செய்து எடுத்திட்டு வந்திருக்கா கடையிலே கொஞ்சம் முட்டாசியும் ரெண்டு பழமும் வாங்கிட்டுப் போனலும் போச்சுயின்னுதான் மத்தவங்க நெனேப்பாங்க.

அவ மனசுக்குள்ளே என் பேரிலே ஆசை கொண்டிருந் திருக்காங்கிறது அன்னேக்கு அவளே பாளையங்கோட்டையிலே சந்தித்தப்பவே புரிஞ்சுது. என் ஞாபகமாயிருந்து, என்னைப் பற்றி அவ்வப்போது விசாரிச்சு அனைத்தையும் தெரிஞ்சு கொண்டிருந்ததும் அல்லாமே, என் பேரையே தன் மகளுக் கும் இட்டிருக்காளே இதெல்லாம் வளர்த்த பாசம், அம்மை மீது கொண்ட அன்பும் நன்றியும்தான்னு சொல்றதுக்கில்லே, அதுவும் இருக்கும். ஆன. அது மட்டுமேதான்னு சொல்லி விட முடியாது. அதுமாத்திரமாகவே இருக்குமானல், அம்மை பேரையே தன் மகளுக்கு இட்டிருந்திருப்பாளே காமாட்சி யின்னு.

அம்மை செத்தபோது செம்பகத்துக்கு எட்டு அல்லது ஒன்பது வயசு இருக்கும். சின்னப் புள்ளேதான். அம்மைக்கு பொட்டைப்புள்ளே இல்லேங்கிறது பெரிய குறை. வீட்டிலே பேரன் பேத்தியும் இல்லை என்கிற ஆற்ருமை. செம்பகத்தை, வேலைக்காரி பொன்னம்மா மகதானேன்னு அலட்சியப்படுத் தாமெ, பிரியத்தோடு வளர்த்தா. எப்பவும் அந்தப்புள்ளே இங்கேதானே கிடந்துது. அவ வீட்டிலே நல்ல சாப்பாட் டுக்கு வழி ஏது ? இங்கே காப்பி, இட்டிலி தோசை, ருசிருசி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/210&oldid=589469" இலிருந்து மீள்விக்கப்பட்டது