பக்கம்:நினைவுச்சரம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 2i +

யாச் சாப்பாடு, அடிக்கடி தின்பண்டம் கிடைத்துக் கொண்டே இருக்குமே. எந்தப் புள்ளேயானலும் சரி, சதா தீவனம் கிடைக்கிற இடத்தையேதான் சுத்திக்கிட்டு வரும். தீனி கொடுக்கிறவங்க கிட்டே, கொடுக்கிறதை நிறுத்தது. வரை, பிரியமாத்தான் இருக்கும். அம்மை, செம்பகத்துக்கு அடிக்கடி சட்டை பாவாடை எல்லாம் புதுசு புதுசா எடுத்துக் கொடுத்துக்கிட்டிருந்தா, அதேைல வேறே அம்மை மேலே பிரியம் ஏற்பட்டிருந்திருக்கும். அம்மை செத்துக் கிடக்கை யிலே அது என்ன அழுகை அழுதுது அப்புறம் எத்தனைநாள் நினேச்சு நினேச்சு அழுதுக்கிட்டே இருந்துது ஆகு, செத்த வங்களே சீக்கிரமே மறந்திருதாங்க எல்லோரும். கிடைக்க வேண்டியது குறையாம ஒழுங்காக் கிடைச்சுக்கிட்டே இருந்தா செத்தவங்க நினைப்பு எதுக்காக வரப்போகுது?

செம்பகத்துக்கு வழக்கம்போல எல்லாம் கிடைக்கும்படி நான் கவனிச்சு வந்தேன். அது மேலே எனக்கு விசேஷமான பாசமோ பிடிப்போ ஒண்னுமில்லே. அம்மை தொடர்ந்து அன்புகாட்டி வளர்த்தாளே, தொடர்ந்து அதை கவனிச்சு, அதுக்கு வேண்டியதை செய்தா அம்மையின் ஆத்மா திருப்தி அடையுமேன்னுதான். நான் வேறே திதி-திவசம் எதுவும் செய்யலே, அதிலே எல்லாம் எனக்கு நம்பிக்கையும் இல்லே.

செம்பகம் கவலே இல்லாம வளர்ந்துது. எப்பவும் வீட்டி லேயேதான் கிடக்கும். நினேச்சா பள்ளிக்கூடத்துக்குப் போகும். அநேக நாள் போகாது. நாலாம் கிளாசோடு படிச்சது போதும், வாத்தியாரு அடிக்காருன்னு சொல்லி, பள்ளிக்கூடம் போறதையே விட்டுட்டுது. வீடுதான் பெரிசாக் கிடக்கே. விளையாடதுக்கு தெருப்புள்ளேகளைக் கூட்டியாந்து அடைச்சுக்கிடும். அம்மை இருந்தால் சத்தம் போட்டு அது களே விரட்டுவா. நான் விளையாடிட்டுப் போட்டுமேன்னு: சும்மா இருந்திடுவேன். பிள்ளைகள் சேராதபோது என்கூட விளையாடி, சிரிச்சுப் பேசி நேரம் போக்கும். கதை சொல்லு, கதை சொல்லுன்னு பஞ்சரிக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/211&oldid=589470" இலிருந்து மீள்விக்கப்பட்டது