பக்கம்:நினைவுச்சரம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 213

காலடிச்சத்தம் கேட்டு, தன்னை தொட்டுப் புடிக்க எந்தப் புள்ளேயோ வந்திருக்குன்னு எண்ணி கம்முனு நின்ன செம் பகம், கதவு உள்நோக்கி தள்ளப்படவும், அந்தப் புள்ளேயை பயப்படச் செய்யனும்னு நினேச்சு, ஒவ்’ என்று பெரிசாச் சத்தம் போட்டுவிட்டு வெளியே பாய்ஞ்சுது. சிரித்தபடி வேகமா வந்த அது என் கைகளுக்குள் அகப்பட்டுக்கிட்டுது. 'நீங்களா ! என்று சொன்ன அதுக்கு வெட்கம் வேறே நிறைய வந்துட்டுது. சிரிப்பும் வெட்கமும் குழப்புமுமாகி முகம் சிவந்து, தலைகுனிந்து அது அப்படியே நின்னுட்டுது. நானும் அந்தப் புள்ளேயின் அந்த நேரத்து முக அழகையே பார்த்து ரசித்தபடி, கைகளை விலக்காமலே நின்னுட்டேன்.

அந்தச் சமயம் பார்த்து ஒரு ஆளு எதுக்கோ என்னே தேடி வீட்டுக்குள்ளே வந்திருக்கு. நாங்க நின்ன நிலையை பார்த்து விபரீதமா அர்த்தம் கற்பிச்சுக்கிட்டு, ஒகோ, சரி தாஞ் சரிதான் 'லு சொல்லிப்போட்டு வந்தவழியே திரும் பிட்டுது. -

அப்பதான் நான் என் தவறை உணர்ந்தேன். செம்ப கமும் தன்னே உணர்ந்து விலகி, அடுப்பங்கரை பக்கம் ஓடிப் போள்ை. இவ்வளவுதான் நடந்தது. ஆ ைஅது எப்படி எப்படியோ உருமாறி, பூச்சுமானமெல்லாம் பெற்று, ஊரு பூராப் பரப்பப்பட்டுவிட்டது. கலியானம் ஆகிறதுக்கு வழி இல்லாமப்போன மயிலேறுப்பய சின்னப்புள்ளே யை கெடுத் திட்டான். ரொம்ப நாளா அதுகிட்டே விஷமம் பண்ணி விளேயாடிக்கிட்டிருக்கான். இன்னிக்குத்தான் அது அம்பல மாச்சுன்னு பேச்சு பரவிவிட்டுது. ஒழுக்கத்தை காப்பாத்தி ஊரிலே கொலு இருக்கப் பண்றதுக்காகவே வாழ்றதா பாவலாப் பண்ணிக்கிட்டுத் திரிகிற சில பயலுக, என்னே உதைச்சு எனக்கு புத்தி கற்பிக்கணுமின்னு திட்டம் தீட்டி ளுங்க. சில பெரிய மனுசங்க மறுநாள் விசாரிச்சு அபராதம் போடலாம்னு யோசிச்சிருப்பதாகவும், எனக்கு வேண்டி யவன் ஒருத்தன் வந்து சொன்னன். எனக்கான ஆத்திரமும் கோபமும் பொங்கி வந்துது. ஒரு பழியும் இல்லாதபோது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/213&oldid=589472" இலிருந்து மீள்விக்கப்பட்டது