பக்கம்:நினைவுச்சரம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9.

கரம் 215

பட்டுக்கிட்டே இருந்துது. ஆமா. நான் இன்னும் எத்தனை காலம் வாழ்ந்திடப் போறேன்! சீக்கிரம் போய்சேர வேண்டியது தான்,

- அது சரி. இப்போ திடீர்னு செம்பகம் மொட்டு மாதிரி முளேச்சிருக்காளே ; இது என்னத்துக்காக இருக்கும்? ரெண்டு நாளா என் மனசு வேறே சரியாவே இல்லை. இனம் :புரியாத ஒரு கலவரம் இருந்துக்கிட்டே இருக்கு. என்ன தான் காத்திருக்குதோ, எனக்கே புரியலே. உம். நடக்கிறது நடந்து தான் தீரும். என்ன வேனும்லுைம் நடக்கட்டும் !

22

செண்பகம், மயிலேறும் பெருமாள் பிள்ளேயிடம், தனது சோக வரலாறு முழுவதையும் சொல்லித் தீர்த்தாள்.

அவர் பிறவியா பிள்ளே மூலம் அறிந்து கொண்ட கதை தான் அது. இருப்பினும், அவள் ரொம்ப விஸ்தாரமாக, தனது உணர்ச்சிகள், எண்ணங்கள், கருத்துக்களே எல்லாம் சேர்த்துச் சொல்வதை அவர் பொறுமையோடு கேட்டிருந் தார். திரட்டுப்பாலேருசித்துச் சுவைத்து, ("திரட்டுப் பால் ரொம்ப அருமையாக இருக்கு, செம்பகம்”), முறுக்குகளே அசைபோட்டு ("முறுக்கு பொறுபொறுன்னு, வாயிலே போட் டதும் கரைஞ்சு போற மாதிரி இருக்கு, செம்பகம்’),

பிளாஸ்கிலே இருக்கிற காப்பி அப்படியே இருக்கட்டும். அதை பொறவாட்டும் குடிச்சாப் போகுது’ என்று சொல்லி செண்பகம் போட்டுக் கொடுத்த காப்பியை சூடாக மணத் தோடு குடித்தபடி, அவளது பேச்சையும் கிரகித்துக் கொண் டார் அவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/215&oldid=589474" இலிருந்து மீள்விக்கப்பட்டது