பக்கம்:நினைவுச்சரம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2í6 நினைவுச்,

முடிவாக அவள், தான் வந்த காரியத்தையும் தெரிவித். தாள். எனக்கும் வயசாயிக்கிட்டே போகுது. முன்னெ மாதிரி ஏலெல (இயலவில்லை). திடீர்னு மண்டையை போட்டு வச்சா அந்தப் புள்ளே மயிலுகதி என்ன ஆகும்கிற கவலே. பெரும் கவலேயா இருக்கு. அவளுக்கு நாதியாரு இருக்கா? கல்யாணமின்னு பண்ணி எவன் கையிலாவது புடிச்சுக் கொடுத்திட்ட , அந்தப் பொறுப்பு என்னை விட்டு நீங்கி, விடும். ஈசன் என்னேக்கு அழைக்காரோ அன்னேக்கு கவலே. யில்லாமல் போய் சேர்ந்திருவேன். கல்யாணம் முடிக்கதுன்னு: சொன்ன லேசா ? காசு பணம் வேணுமே. நானும் எவ்வளவோ பிரயாசைப்பட்டுப் பார்த்தேன். குறைஞ்சது: ஆயிரமாவது வேணும். ஏழை எளியவ,ை ஏதாவது வேலை பார்க்கிறவனு, ஒருத்தனே பார்த்து கோயிலிலோ குத்து விளக்கு முன்னலோவச்சு தாலியை கட்டும்படி செய்து, மயிலே அவன் கையிலே ஒப்படைச்சிரனும். நானும் யோசிச்சு யோசிச்சுப் பார்த்தேன். உங்களை கேட்பது தவிர எனக்கு. வேறே வழியில்லே. கேட்கவேண்டாம், கேட்கக் கூடாதுன்னு தான் இருந்தேன். ஆன, மயிலு கதி என்னுகும்னு எண்ணுற போது உங்க உதவியை நாடத்தான் வேணும்னு என் மனசு சொல்லிச்சு. உங்க வீட்டிலே உங்க வீட்டுப்புள்ளெ மாதிரி வளர்ந்தேன்.அம்மையும் நீங்களும் அப்படி என்னே வளர்த்திக. பாவி மட்டை ஊரிலே இருந்தவங்க பழியும் பாவமும் சுமத்தி என் பாவத்திலே அடிச்சுவிழாம இருந்திருந்தா, என் கல்யா னத்தையும் நீங்களே நல்லபடியா நடத்தி வச்சிருந்திருப்பீக. அது நடக்க முடியாம என் விதி பண்ணிப் போட்டுது. என் மகளுக்காவது நீங்க நல்ல வழி காட்டனும். உங்களை தெய்வமா நினைச் சக் கும்பிடுதேன். நீங்கதான் எனக்கு, தகப்பன் மாதிரி. ஒரு அண்ணுச்சி மாதிரி. உங்க மகளுக்கு, உங்க தங்கச்சிக்கு நீங்க உதவி செய்றதா நினேச்சுக்கிட்டு எனக்கு இந்த உதவி பண்ணனும். ஆயிரம் ரூபா கொடுத்து, மயிலு கல்யாணம் நடக்க வழி பண்ணனும். உங்க. நினைவாத்தான் அவளுக்கு இந்தப் பேருவிட்டிருக்கேன். நீங்க தான் எங்க குலதெய்வம்...?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/216&oldid=589475" இலிருந்து மீள்விக்கப்பட்டது