பக்கம்:நினைவுச்சரம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 217

செண்பகம் உருக்கத்தோடு, இதயதாபத்தோடு, அவர் தனது வேண்டுதலுக்கு செவிமடுத்து உதவி பண்ண வேண்டுமே என்ற ஏக்கத்தோடு, சொன்னதையே திரும் பத்திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

அவள் பேச்சும் பரிதாப நிலைமையும் அவர் இதயத்தைத் தொட்டன. நல்ல பையனு மாப்பிள்ளே யாரையாவது பார்த்து வச்சிருக்கையா ?? என்று கேட்டார்.

இன்னமே தான் பார்க்கனும். பணம் கிடைச்சிட்டா பையன் கிடைக்காமலா போவான்? என்ருள் அவள்.

அவர் பெருமூச் செறிந்தார். 'உன் அம்மை செய்த தவறையேதான் நீயும் செய்ய ஆசைப்படுறே, செம்பகம். அவ என்ன செஞ்சா? தன் பொறுப்பும் சுமையும் கழியனும்; எவன் கையிலாவது உன்னை புடிச்சுக் குடுத்திரனும்னு நெனச்சா. அப்படியே செய்தா. உன் வாழ்க்கை பாழாச்சு. நீயும் உன்மக விஷயத்திலே அதே மாதிரித் தான் ஆசைப் படுறே. வீணு அந்தப்புள்ளே வாழ்க்கையையும் கெடுத்துப் போடாதே. யோசிச்சு நல்ல முறையிலே செய்ய வேண் டிய காரியம் இது என்ருர்,

எங்க அம்மை என்ன செய்வா? அவளுக்கு உதவிக்கு யாருமே இல்லே. தன்னலே ஆனதை செய்து முடிச்சா. என்விதி இப்படி இருந்திருக்கு. எந்தத் தாயாராவது தன் மக வாழ்க்கையை நாசமாக்கணும்னு நினைப்பாளா? நானும் மயிலுக்கு நல்லதைத்தான் நினைக்கிறேன். அவ தலே எழுத்து எப்படி இருக்கோ அதன்படி நடக்கது நடந்துட்டுப்போகுது? என்று அவள் சொன்னள்.

-நம்ம ரத்தத்தோடு ரத்தமா, தலேமுறை தலைமுறையா ஊறிப்போன தத்துவம் இது. லேசிலே இது மாறிப்போகுமா? இல்லை, மாற்றிவிடத்தர்ன் முடியுமா?

பெரியபிள்ளேயின் மனம் சிரித்துக்கொண்டது. அவர் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்தார்.

பூ108-கி- 14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/217&oldid=589476" இலிருந்து மீள்விக்கப்பட்டது