பக்கம்:நினைவுச்சரம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2}8 நினைவுக்

சரி செம்பகம், என்னுலான உதவிகளே நான் நிச்சயம் செய்வேன். நீ அவசரப்படாதே. இன்னிக்கு என்னகிழமை? வியாழனு? திங்கள்கிழமை மத்தியானம் நான் உங்க வீட் டுக்கு வாறேன். அன்னேக்கு உன் வீட்டு விருந்துச் சாப்பாடு எனக்கு : என்று சொல்லி ரசித்துச் சிரித்தார் பிள்ளை.

உங்களுக்கு விருந்துபண்ண எனக்கு கொடுத்து வச்சி ருக்கனுமே!’ என்று கூறிய செண்பகம், அவர் எதிர்பாரா ததை செய்தாள். அவர் முன் விழுந்து கும்பிட்டு, அவ ருடைய பாதங்களே தொட்டுத் தன் கண்களை ஒற்றிக்கொண் டாள்.

செச்சே, என்ன இது 1 என்ன செண்பகம் இப்படி? என்று பதறினர் அவர். -

எங்க குல தெய்வத்தை கும்.யிடுறதிலே என்ன தோஷம் இருக்கு ?’ என்று முணுமுணுத்தாள் அவள். .

மனுஷன் தெய்வம் ஆகணும்னு ஆசைப்பட வேண் டாம். மனுஷனுகவே நடந்து, மனுஷத்தன்மை குன்ருத காரியங்களே செய்து கொண்டிருக்க விரும்பி அப்படியே செய்து முடித்தால் போதுமே !’ என்று பெரியபிள்ளை குறிப் பிட்டார்.

நீங்க இந்த வயசிலே உங்க கையாலே சமைச்சு சாப் பிட்டுக்கிட்டு இருக்கிறதை நெனேக்கையிலே எனக்கு மனசுக் குக் கஷ்டமாயிருக்கு’ என்று வருத்தப்பட்டாள்.

கஷ்டமோ சிரமமோ, அவரவர் மனசுக்குப் பிடிச்ச காரியங்களே செய்துகொண்டிருப்பதிலே தனியான ஒரு சந்தோஷம் ஏற்படுது. அதன் மதிப்பு அதை அனுபவிக்கிற வங்களுக்குத்தான் தெரியும்’ என்று மன. பென. கூறினர்.

சங்கடமான சமையலே செய்யும் சிரமம் அன்றைக்கு அவருக்கு இல்லாமல் போய்விட்டது. சோறு வடித்து, சாம்பார் வைத்து, உருளேக்கிழங்கு பொரியலும் தயாரித்து முடித்த பிறகே செண்பகம் அவரிடம் விடை பெற்றுக் கொண்டு பாளையங்கோட்டைக்குப் போனுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/218&oldid=589477" இலிருந்து மீள்விக்கப்பட்டது