பக்கம்:நினைவுச்சரம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

妨》

g* Jus) 22 i

அந்தச் சிறுக்கி இங்கே வந்துபோனது நமக்குத் தெரி யாமப் போச்சே. அவ என் கண்ணிலே பட்டிருந்தா சரியான கேள்வி கேட்டிருப்பேனே. எவனேயாவது விட்டு, வாங்க வாங்களடி லவண்டீங்களா-வாத்தியாரு சட்டாம்பிள்ளையை கண்டீங்களா?-அடி, போங்க போங்களடி லவண்டீங்களா ! ஒரு புருசனுக்கு ஆசைப்பட்டு நின்னிங்களா?-ன்னு பாடச் சொல்லியிருக்கலாமே ! அந்தக் காலத்திலே ரொம்ப ஃபே மஸ்ா இருந்த நாடகப்பாட்டு ஐயா இது. தூக்குத்துக்கி நாடகத்திலே பபூன் சண்முகம் பாடுவான் பாரும், ரொம்பப் பிரமாதமா இருக்கும். அப்புறம் பிளேட்டிலேகூட வந்துது. ஆகா! என்று சுகவாசி சொக்கினர்.

பிறவியாபிள்ளையிடம் கேட்காமல் இருப்பார்களா? கேட் டார்க்ள், கேட்டார்கள். என்ன, அண்ணுச்சியை பத்தி என்னென்னமோ பேச்செல்லாம் அடிபடுதே! செம்பகம் இங்கே வந்திட்டுப் போனளாமே? எல்லாம் நெசம்தான? என்று நல்லவர்கள் போல் விசாரித்தார்கள்.

உங்களுக்குத் தெரிஞ்ச அளவுதான் எனக்கும் தெரியும். ஊர்னு இருந்தா வல்லதையும் பேசத்தான் செய்வாங்க. நல்லது பொல்லாதது, உள்ளது இல்லாதது எல்லாம் பேச் சிலே அடிபடத்தான் செய்யும் என்று அவர் சொல்லி வைத்தார். -

அண்ணுச்சி மதுரையில் இருந்தபோது, இங்கே சிவபுரத் தில் நடப்பது அனைத்தையும் ஒன்றுவிடாமல் அவருக்கு எழுதி அறிவிப்பது பிறவியாபிள்ளையின் வழக்கமாக இருந்தது. இப்போது ஊரில் நடமாடுகிற இந்தப் புரளியையும்-அது பெரியபிள்ளை சம்பந்தப்பட்டதாகவே இருந்தபோதிலும்அண்ணுச்சியிடம் தெரிவிக்கவேண்டியது தனது கடமை யாகும் என்று பிறவியாபிள்ளே கருதினர்.

ஆகவே, மன. பென. இரவுச் சாப்பாட்டை முடித்து விட்டுக் கட்டிலில் ஓய்வாக படுத்துக்கிடந்தபோது, பிறவியா பிள்ளை கால தேய்த்துத் தேய்த்து நடந்துவந்து தயங்கித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/221&oldid=589480" இலிருந்து மீள்விக்கப்பட்டது