பக்கம்:நினைவுச்சரம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 நினைவுச்

தயங்கி நின்ருர், அவர் வந்த தோரணையிலும் நின்ற நிலை யிலும், ஏதோ சொல்வதற்கு வந்திருக்கிருர் என்பது புலன யினும், அவர் ஒன்றும் பேசாமலே திகைத்துப்போய் நிற்பதை கண்ட பெரியபிள்ளை, என்னய்யா விசயம்? ஏன் ஒருமாதிரி நிக்கேரு ? என்று கேட்டார்.

பிறவியாபிள்ளே புடதியைச் சொறிந்தார். மோட்டை பார்த்தார். ஒரு விசயம் சொல்லவும் வேனும் ; சொல் லவும் கூடாதுன்னு இருக்கு’ என்று இழுத்தார்.

‘சும்மா சொல்லும் வே? என்று பெரியவர் எழுந்து உட் கார்ந்தார். உட்காரும். சும்மா இப்படி கட்டில்லேயே இரியும் என்ருர். தன்னைப் பற்றிய விஷயம், அதல்ைதான் தம்பியாபிள்ளே தயங்குகிருர் என்ற சந்தேகமே அவருக்கு வரவில்லை. ஏதோ சொந்த சமாச்சாரம் ; அண்ணுச்சியிடம் எப்படிடா சொல்றதுன்னு தயங்குருன் என்றுதான் அவர் எண்ணினுர்,

பிறவியாபிள்ளே உட்கார்ந்தார். இந்த ஊரைத்தான் உங்களுக்குத் தெரியுமே. சுத்த மோசம் அண்ணுச்சி. யாரை பத்தி என்னதான் பேசுறதுன்னே கிடையாது. வாய் புளிச் கதோ மாங்காய் புளிச்சுதோன்னு கண்டமானிக்கி பேசுறது தான் வழக்கமா இருக்கு. அதிலேயும் பொம்பிளேக இருக்காங் களே-அப்பா, சொல்லவே வேண்டாம். ஒருத்தி ஒரு விசயத்தை ரகசியம்னு சொல்லி வைக்கிறது. உடனே எல்லாரும் அதையே பெரிசுபடுத்தி தமுக்கடிச்சு, பாத்தியாபாத்தியா, கேட்டையா.கேட்டையான்னு கூத்தடிக்கிறது தான் வழக்கமாப்போச்சு என்று சுற்றி வ&ளக்கலானர்.

விசயத்தை சொல்லும். இப்ப என்ன நடந்தது :

செம்பராநல்லூர் கிழவி என்னத்தையோ விதைச்சு வச்சிருக்கா. அது ஊரு பூரா முளைச்சு வெடிக்குது 1 என்று விவரத்தைச் சொன்னர் பிறவியாபிள்ளை. அதுக்கு ஏத்தாப் பலே செம்பகமும் வந்திட்டுப் போயிருக்கா. குசுவை கேட்டே சாமி ஆடுறவங்க, கொட்டைக்கண்டா விட்டுடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/222&oldid=589481" இலிருந்து மீள்விக்கப்பட்டது