பக்கம்:நினைவுச்சரம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 நினைவுச்

போதும், அவர் தன் விருப்பத்தை எடுத்துச் சொன்னர், "இதல்ை உனக்கு நன்மை தான் ஏற்படும். நீ யோசிப்பதற்கு எதுவும் இல்லே. இருந்தாலும், பெண்ணே பார்த்து விட்டே நீ உன் முடிவை சொல்லலாம் என்ருர்.

ஐயா எப்பவும் எனக்கு நல்லதைய்ேதான் செய் வீங்க. ஐயா விருப்பத்துக்கு நான் மறுத்தா சொல்லப் போறேன் :: என்று சுந்தரம் தெரிவித்தான்.

பாளையங்கோட்டைக்குப் போவதற்கு முன்பு ஆற்றில் குளித்து விட்டு, சுத்தமாகச் செல்வதே நல்லது என்று மன: பெளு. அபிப்பிராயப்பட்டார். பிரயாண அசதியும் மேலே படிந்திருந்த ரயில் கரியும் தூசியும் நீங்க அது தேவைதான் என்றே அவனும் கருதின்ை.

அப்படியே செய்தார்கள். செண்பகம் வீட்டுக்குப் போய் சேர்ந்த போது மணி பன்னிரண்டே கால் ஆகியிருந்தது. அவள் வாசல் நடையில் நின்று எதிர்பார்த்துக் கொண்டே யிருந்தாள். தூரத்தில் வரக் கண்டதுமே, அகமும் முகமும் மலர்ச்சியுற உள்ளே போய், தயாராகக் காத்து நின்ருள். அவர்கள் வீட்டுக்குள் அடி எடுத்து வைத்ததும் வாங்க வாங்க’ என்று வரவேற்ருள். கால்களே அலம்பிக் கொள்ள வாளியில் தண்ணிரும் ஒரு சிறு செம்பும் இருந்தன.

அவர்கள் உள்ளே போனுர்கள். பாய் விரிக்கப்பட் டிருந்தது. உட்காருங்க’ என்று உபசரித்தாள் செண்பகம்.

மயிலு முன் வந்து பெரிய பிள் இளமுன்னே, பெண்கள் கும்பிடும் முறையில், மண்டியிட்டு முகம் தரையில் படும்படி குனிந்து, வணங்கிள்ை.

நல்லாயிருக்கணும். தீர்க்காயுசா, தீர்க்க சுமங்கலியா இரு’ என்று அவர் வாழ்த்தினர்.

- அவள் எழுந்து ஒரு ஒரமாக ஒதுங்கி நின்ருள். சுந்தரம் அவளே நன்ருகப் பார்த்துக் கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/228&oldid=589487" இலிருந்து மீள்விக்கப்பட்டது