பக்கம்:நினைவுச்சரம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'சரம் 23

ஆரம்பிக்குது. இந்த வீடு கட்டி எழுபத்தோரு வருசம் ஆகுதே. ஒரு வெடிப்பு விழுந்திருக்குதா? எந்த இடத்திலாவது மழைத் தண்ணி ஒழுகுமா? பேசப்படும்? ஹ9ங், எப்படியாப்பட்ட வீடு! - - - -

தம்பியாபுள்ளே, காங்கிரீட்டு, சிமின்டு என்கிற தெல் லாம் சமீப காலத்தில் அல்லவா வந்துது? அந்தக் காலத்திலே எல்லாக் கட்டிடங்களையும் சுண்ணும்பும் செங்கல்லும் கொண்டு தான் கட்டினுங்க. சுண்ணும்பை அதுக்குன்னு உள்ள அம்மியிலே வச்சு அரை அரைன்னு அரைச்சு, காரை ன்னு குழைச்சு வைப்பாங்க. அப்படி அரைக்கிறபோது பதினியை ஊத்தி அரைப்பாங்க, கருப்பட்டியை சேர்த்துப் போட்டும், முட்டைகளே உடைச்சு ஊத்தியும் சாந்து அரைப்பாங்க. அது கப்னு புடிச்சுக்கிடும். பேயாப் புடிச்சுக்கிடும். லேசிலே இடிபடாது.

தாமிரபர்ணி ஆத்திலே கொக்கிர குளத்துக்கிட்டே பாலம் கட்டியிருக்காங்களே அது இப்படித்தான் கட்டப்பட்டிருக்கு தெரியுமா? கிழக்கிந்தியக் கம்பெனியான் காலத்திலேயே கட்டப்பட்டது. கம்பேனியிலே துபாஷ் வேலே பாாத்த சுலோ சன முதலியார் கட்டி வச்சாரு. அதுேைலதான் அதுக்கு சுலோசன முதலியார் பாலம்னு பேரு. எவ்வளவு பெரிய பெரிய வெள்ளங்களே எல்லாம் அது பார்த்திருக்கு. அசைஞ்சு கொடுக்குதா? எப்பவோ ஒரு வெள்ளத்திலே மரமோ என்ன மோ இசைகேடா வந்ததிலே, ரெண்டு கமானு பழுதாகிப் போச்சு. அதையும் பழைய மாதிரியே கட்டிட்டாங்க. பாலத் தைப் பழுது பார்க்கணும்னு இடிச்சுக் கொத்த முன் வந்த போது லேசாகவா இடிக்க முடிஞ்சுது? பெயர்க்க முடியலியே! எல்லாம் கருப்பட்டியும் பதினியும் முட்டையும் கலந்து தயாரிக் கப்பட்ட சுண்ணும்பின் சக்தி. இதுக்குப் பிறகு காங்கிரீட் டிலுைம் கர்டர்கள் வச்சும் கட்டப்பட்ட பாலங்களிலே எத்தனேயோ இடிஞ்சு நொறுங்கிப் போயிருக்கு மேலும், இப்போ இஞ்சினிரு சுக்குனிருன்னு மெத்தப் படிச்ச மேதாவி கள் எவ்வளவோ பிளான் பண்ணிப் பாலம் கட்டுருங்களே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/23&oldid=589265" இலிருந்து மீள்விக்கப்பட்டது