பக்கம்:நினைவுச்சரம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரம் 23?

வேறலே. என் மகன் கல்யாணம் அங்கே நடக்கணும்னு நான் ஆசைப்பட்டாலும் அது நிறைவேருது. சொக்கையா கல்யாணம் மதுரையிலேதான் நடக்கும். மீனுட்சியின் ஆசை, திட்டம், தீர்மானம் எல்லாம் அதுதான். அதனுலே, நீ அன்னைக்கு வந்து சொன்னதுமே, மயிலு கல்யாணத்தை இங்கே நடத்திப்போட வேண்டியதுதான்னு நான் தீர்மானிக் சிட்டேன்.”

உங்க இஷ்டம். நான் என்ன மறுக்கவா போறேன்? என்ருள் அவள்.

சரி. என்கிட்டே நீ கேட்டபடி, ஆயிரம் ரூபா இந்தா இருக்கு என்று வெற்றிலே மீது பண நோட்டுக்கட்டை அவர் வைத்தார்.

அவள் அவரைக் கும்பிட்டு அதை எடுத்துக்கொண்டாள். எல்லா ஏற்பாடுகளும் நடக்கட்டும். சுந்தரம் சாயங் கால ரயிலுக்கு மதுரைக்குப் போயிட்டு அப்புறமா வந்து சேருவான். நீயும் மயிலும் சாப்பிடுங்க. நாங்க போயிட்டு வாருேம் என்று சொல்லி அவர் எழுந்தார். சுந்தரமும் எழுந்தான்.

இருங்க. மூணு மணிக்கு காப்பி சாப்பிட்டுவிட்டுப் போகலாம்’ என்று அவள் உபசரித்தாள்.

- அருமையான விருந்துச் சாப்பாடுதான் போட்டாச்சே, இன்னும் காப்பி என்னத்துக்கு ?? என்ருர் பிள்ளை. அம்மா மயிலு, போய் வாருேம் என்று அவளே அழைத்தார்.

அவள் கொஞ்சம் முன்னல் வந்து நின்ருள். சுந்தரத்தை இன்னுமொரு தடவை நன்ருகப் பார்த்துக்கொள்ளலாமே என்ற நினைப்பு. அவன் ஆள் மோசமில்லே. அவளுக்குத் திருப்திதான்.

அவனும் அவளே நன்ருக நோக்கினன். மயிலு அழகி தான். அவனுக்கு மிக்க மகிழ்ச்சி. போய் வாறேன். என்று விடை பெற்றுக்கொண்டு அவனும் புறப்பட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/231&oldid=589490" இலிருந்து மீள்விக்கப்பட்டது