பக்கம்:நினைவுச்சரம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 நினைவுச்

தபாலில் அவர் பெயருக்கு வந்திருந்தது. உள்ளே 'உண்மை விளம்பி’ என்று கையெழுத்திட்டு எவனே வீணன் எழுதியிருந்தான்.

மயிலேறும்பெருமாள் பிள்ளைக்கு பழைய மோகம் புது வேகத்தோடு செயல் புரிவதாகத் தெரியுது. அவருக்கு செம்பகம் என்ருெரு காதலி இந்த ஊரில் முன்பு இருந்தாள். இப்போது பாளேயங்கோட்டையில் இருக்கிருள். பிள்ளைவாள் ஊருக்கு வந்ததும், அவளும் வந்துபோக ஆரம்பித்து விட் டாள். இதை வளரவிட்டால் ஆபத்து. - இதுதான் கடித விஷயம். -

- பெரியபிள்ளை ரசித்துச் சிரித்தார். மீனச்சி, இதுமாதிரி உண்மை விளம்பிகளில்ைதான் விபரீதங்களே நடக்கு. இதை எழுதினவன்கிட்டேயே கேட்டுப்போவோம்’ என்ருர். வே, சூரியன் பிள்ளையை கையோடு கூட்டிவாரும்’ என்று பிறவியாபிள்ளையை அனுப்பினர்.

நாய் வாலே மட்டை வச்சுக்கட்டினுலும் நிமிர்த்த முடியாது என்பாக. சில மனிதர்களுடைய குணங்களேயும் அப்படித்தான். மொட்டைக் கடுதாசி எழுதுற தொழிலே அவன் இன்னும் விடலேன்னு தெரியுது” என்று அவர் முனு: முனுத்தார். -

முருகா உண்டு என்று கூறிக்கொண்டே சூரியன் பிள்ளே வந்து சேர்ந்தார். என்ன அண்ணச்சி, கூப்பிட்டீங்க ளாமே? என்று அக்கறையாய் கேட்டார்.

வாருமய்யா வாரும். இரியும் என்ற பிள்ளை, செம் பகத்தைபத்தி சொல்லவேண்டியதை எல்லாம் சொல்லிப் போடும். ஆபத்து வளரக்கூடாது பாரும். உம்ம காயிதம் கிடைச்சதும் மதுரையிலேயிருந்து மீட்ைசி நேரே வந்திட்டா. இதுதான் மீட்ைசி. இவருதான் உண்மைவிளம்பி. வே, உண்மைவிளம்பி, செம்பராநல்லூர் ஆச்சியை வேணுமின் லுைம் துணைக்குச் சேர்த்துக்கிடும். அவளேயும் வரவழைப் போமா? நீரு செம்பகத்துகிட்டே வாலாட்டினது, வாரியக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/234&oldid=589493" இலிருந்து மீள்விக்கப்பட்டது