பக்கம்:நினைவுச்சரம்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 நினைவுச்

உன் கதையை பூரா நீயே இவகிட்டேச் சொல்லு, இன்னிக்கு ராத்திரி நேரம் பூராவும் இருக்கவே இருக்கு என்ருர் பெரிய பிள்ளை,

வாங்க அம்மா என்று கும்பிட்டாள் செண்பகம். அவள் தோற்றமும் பணிவும், பார்த்தமாத்திரத்திலேயே, மீட்ைசிக்கு அவள்மீது ஒரு நல்லெண்ணத்தை உண்டாக்கின. அவள் கூறிய சோக வரலாறு மீட்ைசியின் உள்ளத்தை உலுக்கியது. செண்பகத்துக்காக அவள் கண்ணிர் வடித் தாள். -

மயிலுக்கும் சுந்தரத்துக்கும் திருமணம் இனிது நிறை வேறியது. ஊராருக்குத் திருப்திகரமான ச ப் பாடு கிடைத்தது.

சுகவாசி சூரியன் பிள்ளே அன்று ஊரில் இல்லை. குற்ருலத் துக்கோ பாபநாசத்துக்கோ போயிருப்பதாகச் சிலர் சொன் ஞர்கள். -

போகட்டும் போகட்டும். எந்த ஊரு அருவியிலே போய் குளிச்சாலும் அவன் பாவம் தீரப்போறதில்லே. லேசுப் பட்ட அநியாயங்களும் அக்கிரமங்களுமா செஞ்சிருக்கான் அவன் :: என்று பெரியபிள்ளே நினைத்துக்கொண்டார்.

மறுநாளே மீனுட்சி மதுரைக்குப் புறப்பட்டுவிட்டாள். 'உங்களுக்குத்தான் இந்த வீடும் இந்த ஊரும் பிடிக்கும். இந்தப் பட்டிக்காட்டிலே என்னலே இருக்கமுடியாது. உங்க மனசுக்கு திருப்தி ஏற்படுகிறவரை நீங்கே இங்கே இருந்துட்டு வாங்க. அங்கே சொக்கையா, பாவம், சாப்பாட்டுக்கு கஷ்டப் படுவான் ! என்று கூறிவிட்டுப் போனுள் அவள்.

- இப்படியும் மனேக்கொடிகள் இருப்பார்கள் என்பதை அன்று பாட்டு எழுதினவன் எண்ணியிருக்கமாட்டான், பாவம் ! -

என்ருெரு நினைப்பு வெடித்தது பெரியபிள்ளே உள்ளத்தில். கூடவே சிரிப்பும் சிலிர்த்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/236&oldid=589495" இலிருந்து மீள்விக்கப்பட்டது