பக்கம்:நினைவுச்சரம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியயுகம் பிறக்கிறது !

வாசவன் எழுதியது

சத்தியமும் தர்மமும் கிராமப் புறங்களில் இன்னும் எப்படி நடை முறையில் புழங்குகிறது என்பதை இந் நாவலின் நெடுகிலும் விளக்குகிருர் ஆசிரியர்.

இப்போது நாம் பழைய யுகம் தாண்டி புதிய யுகத்திலே-சத்திய யுகத்தில் காலடி எடுத்து வைத் திருக்கிருேம். இரு வேறுபாடான தத்துவங்கள் முட்டி மோதிக்கொள்ளும் யுகசந்தியிலே நாம் வாழ்கிருேம். இந்தத் தத்துவப் பிரளயத்தின் முடி விலே சத்திய யுகம் தோன்றத்தான் போகிறது.

ஆசிரியர் கூறுகிருர் :- நான் ஆளடிமையாக் கப்பட்ட ஒரு கிராமத்தில் பிறந்தவன். அந்த மண்ணிலே வளர்ந்தவன். காற்றையும் விண்ணையும் சாடுகிற நிலப்பிரபுக்கள் அங்கே சாமர்த்திய சாகசம் புரிவதை நேரிலே கண்டவன். அவர்களின் சாணக்கியத் தனங்களால் ஏழை கிராவாசிகள் பலியாவதைக் கண்கூடாகக் கண்டவன். அதனல் தான் அப்படி ஒரு கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒரு பிரஜையின் மனுவைப்போல இந்த நாவல் ஆக்கித் தந்திருக்கிறேன்.

விலை ரூ 4-90

பூம்புகார் வெளியீடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/239&oldid=589498" இலிருந்து மீள்விக்கப்பட்டது