பக்கம்:நினைவுச்சரம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 25

கொண்டாந்து வைக்கப் போருராமா? சவத்துப் பயலுக்குப் பிறந்த பய! நான் வீட்டை அடைச்சுப் போட்டிருக்கேன் அல்லது தொறந்து போட்டிருக்கேன். லெச்சுமீகரமா வச்சிருக் கேன், இல்லே, மூதேவி அடையப்போடுதேன். உனக் கென்ன, அதைப்பத்தி? வீட்டை விலக்குக் கேட்க வந்திட் டேயே பெரிய மயிரானுட்டம்! சும்மா போட்டிருக்கேன் உனக் கென்னலே? சும்மா கிடக்கிறதினலே உனக்கு வாடகைக்குக் கொடுத்திரனுமோ? திமிரு அய்யா திமிரு. பணம் இருக்கு என்கிற மமதை...”

மயிலேறும் பெருமாள், கடா ஏறிய எமன் மாதிரி, கண்கள் சிவக்கக் கடமுடா என்று சத்தம் போடலானர்.

இவர் கிட்டே இப்போ இதை ஏன்டா சொன்னுேம்?? என்ருகிவிட்டது பிறவியா பிள்ளைக்கு.

அதெல்லாம் சொல்லிவிட்டேன் அண்ணுச்சி. என்கிட்டே கேட்ட மாதிரி அண்ணுச்சிகிட்டே பேச்சு விட்ருதீங்க. அவாள் லேசிலே விட்டிறமாட்டா. இந்த வீடு அவாளுக்கு உசிரு மாதிரி. அவாளே இங்கே வந்து தங்கப் போருகன்னு சொல் விட்டேன்...? - -

‘ஊம்ம் என்று உறுமிஞர் பெரியபிள்ளே. பின்னே என்னங்கேன்?’ என்ருர். நான் இந்த வீட்டிலே தான் பிறந்தேன். நான் பிறக்கிறதுக்காக-அம்மா என்னை பெத்து எடுக்கிறதுக்காகவே-கட்டப்பட்ட வீடு இது. அம்மா எவ் வளவு பெருமையோடு சொல்லிப் பூரிச்சுப்போவா தெரியுமா? வேலாயுதம், ஒரு வைராக்கியத்திலே இந்த வீட்டை கட்டி முடிச்சோம். வீடு கட்டின முகூர்த்தம், என் வயித்திலே நீ உதிச்சே. சொந்த வீடு கட்டின பிறகு தான் நீ பிறக்கணும்னு இருந்திருக்குது பாரேன் என்பா. இந்த வீட்டிலே எனக்கு கல்யாணம் முடிச்சுப் பார்க்கணுமின்னு அம்மாவுக்கு ஆசை. அது நடக்காமலே போயிட்டுது. இந்த வீட்டிலே தான் நான் சாகனும்னு எனக்கு ஆசை. அது நிச்சயம் நிறை வேறும். அதுக்காகத் தான் நான் இப்போ இங்கே வந்திருக் கேன் என்று கூறினர். -

பூ-108-கி-2.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/25&oldid=589267" இலிருந்து மீள்விக்கப்பட்டது