பக்கம்:நினைவுச்சரம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 27

நல்ல உயரம். ஐந்தே முக்காலடி இருக்கலாம். அந்த உயரத்தை அகத்திக்கம்பர்கவோ நெட்டிலிங்கமரமாகவோ தோன்றும்படி செய்யாத உடல்வாகு. உடம்பை, கண்ட கண்ட சாமான்கள் தாதுமாருகத் திணித்துக் கட்டிய சாக்கு மூட்டை மாதிரி, அல்லது மத்திய பாகத்தின் முன்பக்கமும் பின்பக்கமும் அசிங்கமாய், அளவுக்கதிகமான சதைப் பிதுக் கங்களோடு வீங்கி, கவனத்தோடும் கலைநயத்தோடும் உருவாக்கப்படாத பிள்ளையார் சிலே மாதிரி எடுத்துக்காட் டாமல், ஒரு உருவ அமைப்புக்குள் கச்சிதமாக அடங்கிய தோற்றம். ரத்த ஓட்டம் நல்லபடியாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளது என்பதைக் கூறும், சுருக்கங்கள் மடிப்புகள் வாட்டங் கள் வடிதல்கள் இல்லாத - சிறு மினுமினுப்போடு கூடியதிட சரீரம்; தவிட்டு நிறம். ஒட்டவெட்டி விடப்பட்ட தலேமுடி வெண்மையாய் மண்டை பூராவும், கரம்பை மீது புல் வளர்வது போல், சிறிதாய் நெருக்கமாய் வளர்ந்து நிற்கும். பெரியமனுஷத்தனமாய் மயிரைக்குறுக வெட்டிக் கொள்ளாமல் ‘கிராப்’ ஆகவளர விட்டிருந்தால், அது வெள்ளேவெளே ரென நீண்டு படிந்து அவர் முகத்துக்கு ஒரு அறிஞத்தனம் அல்லது சிந்தனேயாளர்களே பூசிக்கொண்டிருக்கக் கூடும். அதை பிள்ளை விரும்புவதில்லை. மீசையும் தாடியும் உறவு கொள்ளும் களமாகத் தனது முகத்தை விட்டுவைக்கவும் அவர் ஆசைப்படுவதில்லே. அது சதா மழுமழுவென மிளிர வேண்டும் என்பதில் அவருக்கு ரொம்ப அக்கறை உண்டு.

உடம்பை மூடி மறைக்கும் எண்ணம் கொள்ளாதவர் பிள்ளே. மேலே துண்டு கூடக் கிடக்காது. அழுக்கேருத துண்டு எப்பவும் அவர் அருகில் தான் கிடக்கும் - அவர் உட்கார்ந்திருக்கும் போது, வெளியே போகிற போது, அழுத்தமான ஒரு கோடு மாதிரி, இடது தோளிலிருந்து கீழே தீண்டு தொங்கிக் கிடக்கும். அணிய வேண்டிய அவசியம் ஏற்படுகிற போது, காலர் இல்லாத, வெள்ளேத்துணி (மெல் லிசு) கமிசு தான் போட்டுக் கொள்வார். நான்கு பித்தான் கள். வெள்ளியாலானவை. சிறு பிள்ளைகளுக்குத் தலேபின்னப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/27&oldid=589270" இலிருந்து மீள்விக்கப்பட்டது