பக்கம்:நினைவுச்சரம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 நினைவுச் பயன்படுத்தப்பட்ட, சிவப்பு அல்லது பச்சை நிற, உல்லன் நூலினுல் அவை; தகுந்த இடைவெளி விடப்பட்டு, சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும். அந்த நூல் கிடைப்பது சிரமம் என்ற திலே வந்ததும், அறுநாக்கயிறு ’ (அரைநாண்கயிறு) க்கு உதவும் கறுப்புக் கயிற்றையே அவர் பயன்படுத்தலானர். சட்டையின் கைகள் தொளதொளவென்று முழு நீளத்துக்கு

இடுப்பில் எப்போதும் மென்மையான தும்பைப்பூ நிற மல்வேட்டிதான். -

நெற்றியில் திருநீறு இலங்கும். நெற்றி பூராவும் அள்ளிப் பூசிக்கொள்ள மாட்டார். குழைத்து விரல்களால் பட்டை பூசிக் கொள்வதுமில்லே, நெற்றி நடுவில் பட்டும் படாமலும் வெள்ளேயாய் தெரியும்.

இப்போதும் அப்படித்தான் கிளம்பினுர். கதவை இழுத்துப் பூட்டிவிட்டு: நிதானமாகப் படியிறங்கி, அவசரமின்றி நடந்த பெரியபிள்ளேயின் அருகில் வந்த நாற்பத்து மூன்று வயதுப் பிறவிப் பெருமாள் பிள்ளேதான் கிழடு தட்டியவராய் காட்சி அளித்தார். ஐந்தடி ஒரு அங்குலம் உயரம் வளர்ந்த சோனி உருவம். அவருக்கு இயல்பாக அமைந்த தாழ்வு உணர்ச்சி, உயர்ந்த-மிடுக்கான யாருக்கும் எதற்கும். கவலைப்படாத நோக்கு கொண்ட பெரியபிள்ளே அருகில் மேலும் அவரை குறுகவைத்தது.

-எப்படி இருக்காரு பாரேன். எழுபது வயசுன்னு சொல்ல முடியுமா? உடம்பு எப்படி இருக்கு பாரு. கரளாக் கட்டை மாதிரி மினுமினுன்னு. எனக்குத் தான் கூன் விழுந் திருக்கு. இவரு நிமிர்ந்து தான் நடக்காரு. நிமிர்ந்தே தான் உட்கார்ந்திருக்காரு. மனுசனுக்குக் கவலே கிடையாது. கவலே தானே ஆளே அரிச்சு அரிச்சுத் தின்னுருது. அது மட்டுமில்லே. நல்ல தீவனம். சரியான ஊட்டம். பாலுன்னும் தயிருன்னும் நெய்யின்னும். பாதாம் பருப்பை அரைச்சு பாலிலே கலக்கிச் சாப்பிடுதாரு தினம் அல்வா, ஆரஞ்சு. மாம்பழ nசன்லே டஜன் கணக்கிலே மாம்பழம். நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/28&oldid=589271" இலிருந்து மீள்விக்கப்பட்டது