பக்கம்:நினைவுச்சரம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 33

சோப்பிடுங்க, நீங்க பாட்டுக்குப் பேசிக்கிட்டே இருக்கீ களே? என்று சிவகாமி குறைகூறினுள்.

பேச்சு பேச்சு தான், சாப்பாடு சாப்பாடு தான். ரெண்டும் அதது பாட்டுக்கு நடந்துக்கிட்டேயிருக்கு!’ என்ற பெரியவர் சிறிது நேரம் சாப்பிடும் கருமத்தில் கண்ணுக இருந்தார். நீயும் விட்டே இல்லியே! உருளேக் கிழங்குப் புட்டு, அவியல், தயிர்ப்பச்சடி, கீரை.பேஷ் பேஷ். அவியல் நல்லாருக்கம்மா. சாம் ப ரு ம் ருசியாயிருக்கு என்று தாராளப் பாராட்டுரைகள் வழங்கினர்.

அதனுல் சந்தோஷம் அதிகரிக்கப் பெற்ற சிவகாமி அவர் இலேயில் அவியலே நிறையவே அள்ளிப்போட்டாள்,

‘என்ன இது! அவியல் நல்லாயிருக்குன்னு சொன்னதுக் காகவா இவ்வளவு போடுதே? எனக்கு இன்னும் வேனும் கிறதுக்காகவா நான் பாராட்டினேன்? உள்ளதை சொன் னேன்? என்று பெரியபிள்ளே முணமுணத்தார்.

‘சாப்பிடுங்க, சாப்பிடுங்க என்று உபசரித்தாள் அம்மாள்.

கயத்தாத்துக்காரன் இன்னிக்கும் கீரை கொண்டாந் தானு?’ என்று பிறவியாபிள்ளே கேட்டார்.

ஆமா, அவன் தான் ரெண்டு நாளேக் கொருக்க கீரை கொண்டு வாருனே? என்று சிவகாமி தெரிவித்தாள்.

பெரியபிள்ளேக்கு இந்த விஷயம் ஆச்சர்யமாகப்பட்டது. "என்னது, கயத்தாத்திலேயிருந்து நம்மூருக்குக் கீரை வருதா? ஏன், இந்த ஊரிலே யாரும் கீரை போடுறதில்லே? என்று விசாரித்தார்.

“இங்கே யாரு கீரை போடுதா? தோட்டமெல்லாம் சும்மா தான் கிடக்குது என்ருள் சிவகாமி.

‘நம்மூருக்கு கயத்தாறிலேயிருந்துதான் கீரை வருது. ஒருத்தன் வழக்கமாக் கொண்டு வாருன். ஒரு சாக்கு நிறைய, சைக்கிள் பின்னலே வச்சுக் கட்டிக்கொண்டு வருவான். காலேயிலே ஆறு, ஆறரை மணிக்கு வந்தால், ஏழரைக்குள்ளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/33&oldid=589277" இலிருந்து மீள்விக்கப்பட்டது