பக்கம்:நினைவுச்சரம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 35

சக்கை பாயசம் கூட வச்சிட்டியா? பெரிய விருந்துதான்னு: சொல்லு!’ என்ருர், -

'அபூர்வமா வந்திருக்கீக. இதுகூடச் செய்யப்படாதா? என்று சிவகாமி பாயசம் பரிமாறினுள். பிள்ளே அதை ருசித் துச் சாப்பிட்டார்.

ஆமா. நம்ம ஊரிலே ஏன் யாரும் கீரை பயிரிடுற தில்லே? முன்னலே நான் இந்த ஊரிலே இருந்தபோது , கீரைத் தோட்டங்கள் செழிப்பாக இருந்துதே? மதுப்பொங்கல் சந்தி அருகே ரெண்டு தோட்டம், தெற்கே தேரடித்தோட்டம், வாய்க்கால் ஒரமா அஞ்சாறு தோட்டங்க - இப்படி நெடுக கீரை போட்டிருப்பாங்க. காலேயிலும் மாலேயிலும் துலா கட்டி தண்ணி இறைப்பாங்க. எப்பவும் தோட்டங்கள் பச்சுபச்சுனு பார்க்கவே குளுமையா யிருக்கும். சிறுகீரை, அரைக்கீரை, முளேக்கீரை, தண்டுன்னு வகைவகையா வளரும். நம்ம ஊருக்கு வேண்டிய கீரை இங்கேயே பயிராகி வளர்ந்தது. அவங்களும் லாபகரமாகத்தான் பயிரிட்டு வாழ்ந்தாங்க. இப்போ ஏன் அதுமாதிரில்லாம் நடக்கிறதில்லே?’ என்று, உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும் எனும் அவாவோடு, மயிலேறும் பெருமாள் விசாரித்தார்.

'ஏன்னு என்ன காரணத்தை திட்டமாச் சொல்லமுடியுது? ஏனே அந்தப் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமா நின்னு போயிட் டுது கஷ்டப்பட்டு உழைக்க ஆள் இல்லாமல் இருக்கலாம். அப்படிக் கஷ்டப்பட்டு உழைச்சவங்களுக்கு போதுமான ஆதாயம் இல்லாமல் போயி, அவங்க உற்சாகம் இழந்து அந்தத் தொழிலே விட்டுவிட்டிருக்கலாம். அந்தப் பாதையிலே துணிந்து போக மற்றவர்களுககு மனம் இல்லாமல் இருந்திருக் கலாம். வயசான வங்க, பெரியவங்க கீரைத் தோட்டம் போட்டுக் கஷ்டப்பட்டு பிழைப்பு நடத்தினங்க. அவங்க மக்கமாரு அப்படி உழைக்கத் தயாராக இல்லே. ஜவுளிக்கடை, மளிகைக்கடை இது மாதிரி எங்காவது மாசச் சம்பளத்துக்கு. வேலே பார்ப்பதே சவுகரியமான பிழைப்பு என்ற எண்ணம் அவங்களுக்கு ஏற்பட்டுட்டுது. ஒன்றிரண்டு பேரு போலீஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/35&oldid=589279" இலிருந்து மீள்விக்கப்பட்டது