பக்கம்:நினைவுச்சரம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 நினைவுச்

வேகலக்குப் போயிட்டாங்க. பக்கத்து ஊர்களிலே - தான் யூத்திலும், திருநெல்வேலி ஜங்ஷன் போகிற வழியிலும் சிமின்ட் ஆபீசு, மில்லுகள்னு வரவும், இளையவர்களுக்கு வேலே சுலபமாக் கிடைக்க வழி பிறந்தது. கைநிறையச் சம்ப ளமும் கிடைக்கும். பின்னே ஏன் கீரைத் தோட்டத்திலே அல்லாடப் போருங்க ? என்று பிறவியா பிள்ளே பேசினர்.

இந்த ஊரும் மாறலே, இங்கே உள்ள ஆட்களும் மாற லேன்னு நான் நெனச்சேனே, அது பூராவும் சரியாக இராது போலிருக்கே ஊரிலும் ஆட்களிடமும் மாற்றங்கள் புகுந்து விளையாடாமல் இல்லேன்னு தோனுதே என்று பெரியபிள்ளே எண்ணிக்கொண்டார்.

சாப்பாடு முடிந்தது.

'நீங்க இங்கே இருக்கிறவரைக்கும் நம்ம வீட்டிலேயே சாப்பிடுங்க என்ருள் சிவகாமி. -

"அது சரிப்படாதம்மா. நான் இங்கேயே தங்கி விடுற துன்னு வந்திருக்கேன்...”

'நல்லா இருங்க. வீட்டையும் வாசலையும் போட்டிட்டு எங்கேயோ போயி இருக்கேளே, இந்த ஊரை எட்டிக் கூடப் பாக்கிறதில்லையேன்னு எனக்கு எவ்வளவு வருத்தம் தெரியுமா? இவொகிட்டேக்கூட அடிக்கடி சொல்லுவேன். இப்ப நீங்க வீட்டோடு வந்திட்டது நல்லதுதான். மதுரையிலேருந்து அக்கா வாற வரைக்கும், இங்கேயே சாப்பிடுங்க. உங்களுக்கு இங்கே வந்து சாப்பிட்டுப் போகப் பிரியம் இல்லேன்னு சொன்னு, நானே சாப்பாட்டை உங்க வீட்டுக்கு எடுத்து வந்து பரிமாறுதேன். உங்களுக்குன்னு தனியாகவா சமைக் கப்போறேன்? என்று சிவகாமி அன்போடு சொன்னுள்.

'சிவகாமி, நீ வருத்தப்படக்கூடாது. நீயும் தம்பியும் சொன்னதுக்காக இந்த வேளேக்கு உங்க வீட்டிலே விருந்து சாப்பிட்டாச்சு. மீனுட்சி இங்கே வாருளோ வரலேயோ, ஒண் னும் சொல்றதுக்கில்லே. நானே சமையல் பண்ணி சாப் பிட்டு எனக்குப் பழக்கம்தான். எனக்கு நன்ருக சமையல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/36&oldid=589280" இலிருந்து மீள்விக்கப்பட்டது